[4:141]
(இந்நயவஞ்சகர்கள்)
உங்களை எப்பொழுதும்
கவனித்தவர்களாகவே
இருக்கின்றனர். அல்லாஹ்வின்
அருளினால் உங்களுக்கு வெற்றி
கிடைத்தால், (அவர்கள்
உங்களிடம் வந்து) "நாங்கள்
உங்களுடன் இருக்கவில்லையா?" என்று
கூறுகின்றனர்.
மாறாக, காஃபிர்களுக்கு
ஏதாவது வெற்றி(ப்
பொருள்) கிடைத்தால்
(அவர்களிடம் சென்று; அவர்களுடன்
சேர்ந்து) "உங்களை
நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய
நிலையிலிருந்தும்
அந்த விசுவாசிகளிடமிருந்து
காப்பாற்றவில்லையா?" என்று
கூறுகின்றனர்.
எனவே அல்லாஹ்
உங்களுக்கும்
(அவர்களுக்கும்)
இடையே நிச்சயமாக
மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள்
மீது வெற்றி கொள்ள
அல்லாஹ் யாதொரு
வழியும் ஆக்கவே
மாட்டான்.
[4:142]
நிச்சயமாக
இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை
வஞ்சிக்க நினைக்கின்றனர்.
ஆனால் அவன் அவர்களை
வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு
அவர்கள் தயாராகும்
பொழுது சோம்பலுடையோராகவே
நிற்கிறார்கள்
- மனிதர்களுக்குத்
(தங்களையும் தொழுகையாளியாக்கி)
காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்).
இன்னும், மிகச்
சொற்ப அளவேயன்றி
அவர்கள் அல்லாஹ்வை
நினைவு கூர்வதில்லை.
[4:143]
இந்த
முனாஃபிக்குகள் முஃமின்களின்
பக்கமுமில்லை, காஃபிர்களின்
பக்கமுமில்லை.
இரு பிரிவினர்களுக்கிடையே
தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ்
எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு
(நபியே!) யாதொரு
வழியையும் நீர்
காணமாட்டீர்.
[4:144]
முஃமின்களே!
நீங்கள் முஃமின்களை
விடுத்து காஃபிர்களை
(உங்களுக்கு உற்ற)
நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே
எதிராக நீங்கள்
ஒரு தெளிவான ஆதாரத்தை
அல்லாஹ்வுக்கு ஆக்கிக்
தர விரும்புகிறீர்களா?
[4:145]
நிச்சயமாக
இந்நயவஞ்சகர்கள் நரகத்தின்
மிகவும் கீழான
அடித் தலத்தில்தான்
இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக
எவரையும் நீர்
காண மாட்டீர்.
[4:146]
யார்
மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை
(தம் நற்செய்கைகள்
மூலம்) கெட்டியாகப்
பிடித்து, தங்களுடைய
சன்மார்க்கத்தை
அல்லாஹ்வுக்காகத்
தூய்மையாக்கியும்
கொண்டார்களோ அவர்கள்
முஃமின்களுடன்
இருப்பார்கள்;. மேலும்
அல்லாஹ் முஃமின்களுக்கு
மகத்தான நற்கூலியை
அளிப்பான்.
[4:147]
நீங்கள்
(அல்லாஹ்வுக்கு)
நன்றி செலுத்திக்
கொண்டும், (அவன்
மீது) ஈமான் கொண்டும்
இருந்தால்; உங்களை
வேதனை செய்வதால்
அல்லாஹ் என்ன இலாபம்
அடையப் போகிறான்? அல்லாஹ்
நன்றியறிவோனாகவும், எல்லாம்
அறிந்தவனாகவும்
இருக்கிறான்.