[4:155]
அவர்களுடைய
வாக்குறுதியை அவர்கள்
மீறியதாலும்; அல்லாஹ்வின்
வசனங்களை அவர்கள்
நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக
அவர்கள் நபிமார்களைக்
கொலை செய்ததாலும், "எங்கள்
இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன." (எனவே
எந்த உபதேசமும்
அங்கே செல்லாது)
என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ்
அவர்களைச் சபித்து
விட்டான்;) அவர்களுடைய
நிராகரிப்பின் காரணத்தால்
அல்லாஹ் (அவர்களுடைய
இருதயங்களின்
மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே
அவர்களில் சிலரைத்
தவிர (மற்றவர்கள்)
ஈமான் கொள்ள மாட்டார்கள்.
[4:156]
இன்னும்
அவர்களின் நிராகரிப்பின்
காரணமாகவும், மர்யமின்
மீது மாபெரும்
அவதூறு கூறியதின் காரணமாகவும்
(அவர்கள் சபிக்கப்பட்டனர்).
[4:157]
இன்னும், "நிச்சயமாக நாங்கள்
அல்லாஹ்வின் தூதராகிய
- மர்யமின் குமாரராகிய-ஈஸா
மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று
அவர்கள் கூறுவதாலும்
(அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள்
அவரைக் கொல்லவுமில்லை, அவரை
அவர்கள் சிலுவையில்
அறையவுமில்லை.
ஆனால் அவர்களுக்கு
(அவரைப் போன்ற)
ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும்
இ(வ் விஷயத்)தில் அபிப்ராய
பேதம் கொண்டவர்கள், அதில்
சந்தேகத்திலேயே
இருக்கின்றார்கள்
- வெறும் யூகத்தைப்
பின்பற்றுவதேயன்றி
அவர்களுக்கு இதில்
எத்தகைய அறிவும்
கிடையாது. நிச்சயமாக
அவர்கள், அவரைக்
கொல்லவே இல்லை.
[4:158]
ஆனால்
அல்லாஹ் அவரைத்
தன் அளவில்
உயர்த்திக் கொண்டான்
- இன்னும் அல்லாஹ்
வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும்
இருக்கின்றான்.
[4:159]
வேதமுடையவர்களில்
எவரும் தாம் இறப்பதற்கு
முன் அவர் (ஈஸா)
மீது ஈமான் கொள்ளாமல்
இருப்பதில்லை.
ஆனால் மறுமை நாளில்
அவர் அவர்களுக்கு
எதிராக சாட்சி
சொல்பவராக இருப்பார்.
[4:160]
எனவே
யூதர்களாக இருந்த அவர்களுடைய
அக்கிரமத்தின்
காரணமாக அவர்களுக்கு
(முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல
(ஆகார) வகைகளை அவர்களுக்கு
ஹராமாக்கி (விலக்கி)
விட்டோம்;. இன்னும்
அவர்கள் அநேகரை
அல்லாஹ்வின் பாதையில்
செல்லவிடாது தடுத்துக்
கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு
இவ்வாறு தடை செய்தோம்.)
[4:161]
வட்டி
வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள்
அதை வாங்கி வந்ததன்
(காரணமாகவும்,) தவறான முறையில்
அவர்கள் மக்களின்
சொத்துகளை விழுங்கிக்
கொண்டிருந்ததன்
(காரணமாகவும், இவ்வாறு
தண்டனை வழங்கினோம்), இவர்களில்
காஃபிரானோருக்கு
(மறுமையில்) நோவினை
செய்யும் வேதனையையும்
நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
[4:162]
எனினும், (நபியே!)
அவர்களில் கல்வியில்
உறுதியுடையோரும், நம்பிக்கை
கொண்டோரும், உமக்கு
அருளப்பட்ட (இவ்வேதத்)தின்
மீதும், உமக்கு முன்னர்
அருளப்பட்ட (வேதங்கள்)
மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை
நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத்
முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாள்
மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்)
இருக்கிறார்கள்
- அத்தகையோருக்கு
நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.