[4:163]
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப்
பின் வந்த (இதர)
நபிமார்களுக்கும்
நாம் வஹீ அறிவித்தது
போலவே, உமக்கும் நிச்சயமாக
வஹீ அறிவித்தோம்.
மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும்
(அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும்
நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும்
தாவூதுக்கு ஜபூர்
(என்னும் வேதத்தைக்)
கொடுத்தோம்.
[4:164]
(இவர்களைப்
போன்றே வேறு) தூதர்கள்
சிலரையும் (நாம்
அனுப்பி) அவர்களுடைய
சரித்திரங்களையும்
உமக்கு நாம் முன்னர்
கூறியுள்ளோம்;. இன்னும்
(வேறு) தூதர்கள்
(பலரையும் நாம்
அனுப்பினோம்;. ஆனால்)
அவர்களின் சரித்திரங்களை
உமக்குக் கூறவில்லை.
இன்னும் மூஸாவுடன்
அல்லாஹ் பேசியும்
இருக்கின்றான்.
[4:165]
தூதர்கள்
வந்தபின் அல்லாஹ்வுக்கு
எதிராக மக்களுக்கு
(சாதகமாக) ஆதாரம்
எதுவும் ஏற்படாமல்
இருக்கும் பொருட்டு, தூதர்கள்
(பலரையும்) நன்மாராயங்
கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை
செய்பவர்களாகவும்
(அல்லாஹ் அனுப்பினான்).
மேலும் அல்லாஹ்
(யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும்
இருக்கின்றான்.
[4:166]
(நபியே!) உமக்குத்
(தான்) அருளிய
(வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே
சாட்சி சொல்கிறான்;. அதைத்
தன் பேரருள் ஞானத்தைக்
கொண்டு அவன் இறக்கி
வைத்தான்; மலக்குகளும்
(இதற்கு)
சாட்சி சொல்கிறார்கள்;. மேலும்
சாட்சியங் கூறுவதற்கு
அல்லாஹ் போதுமானவன்.
[4:167]
நிராகரித்து
அல்லாஹ்வின் பாதையிலிருந்து
(மனிதர்களை) தடுத்து
கொண்டு இருக்கிறார்களே
நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில்
வெகு தூரம் வழி
கெட்டுச் சென்று
விட்டார்கள்.
[4:168]
நிச்சயமாக
(இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம்
செய்பவர்களுக்கு
அல்லாஹ் மன்னிப்பளிக்க
மாட்டான்;. அன்றி அவர்களை
நேர் வழியிலும்
செலுத்த மாட்டான்.
[4:169]
நரகத்தின்
வழியைத் தவிர
- அதில் அவர்கள்
என்றென்றும் தங்கி
விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு
சுலபமாக இருக்கிறது.
[4:170]
மனிதர்களே!
உங்கள் இறைவனிடமிருந்து
சத்தியத்துடன்
(அனுப்பப்பட்ட
இத்)தூதர் உங்களிடம்
வந்துள்ளார். அவர்
மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு
நன்மையாகும்;. ஆனால்
நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும்
எதுவும் குறைந்து
விடாது, ஏனெனில்) நிச்சயமாக
வானங்களிலும்
பூமியிலும் இருப்பவை
அனைத்தும் அல்லாஹ்வுக்கே
உரியவை. அல்லாஹ்வே
(யாவற்றையும்)
நன்கறிந்தோனும், ஞானம்
மிக்கோனும் ஆவான்.