[4:171]
வேதத்தையுடையோரே!
நீங்கள் உங்கள்
மார்க்கத்தில்
அளவு கடந்து செல்லாதீர்கள்.
அல்லாஹ்வைப் பற்றி
உண்மையைத் தவிர
(வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக
மர்யமுடைய மகனாகிய
ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின்
தூதர் தான்;. இன்னும்
("குன்" ஆகுக
என்ற) அல்லாஹ்வின் வாக்காக
(அதனால் உண்டானவராகவும்)
இருக்கின்றார்.
அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே)
அவரும் அவனிடமிருந்து
(வந்த) ஓர் ஆன்மா
தான்;. ஆகவே, அல்லாஹ்வின்
மீதும் அவன் தூதர்கள்
மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய
இறைவன்) மூன்று
என்று கூறாதீர்கள்
- (இப்படிக் கூறுவதை விட்டு)
விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு
நன்மையாகும் -
ஏனெனில் வணக்கத்திற்குரிய
இறைவன் அல்லாஹ்
ஒருவன் தான்;. அவனுக்கு
எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து
அவன் தூய்மையானவன்.
வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம்
அவனுக்கே சொந்தம்.
(காரியங்கள்
அனைத்துக்கும்)
பொறுப்பேற்றுக் கொள்வதற்கு
அல்லாஹ்வே போதுமானவன்.
[4:172]
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு)
நெருக்கமான மலக்குகளும்
அல்லாஹ்வுக்கு
அடிமையாயிருப்பதைக் குறைவாகக்
கொள்ள மாட்டார்கள். எவர்
அவனுக்கு (அடிமையாய்
) வழிபடுதலைக்
குறைவாக எண்ணி, கர்வமுங்
கொள்கிறார்களோ, அவர்கள்
யாவரையும் மறுமையில்
தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
[4:173]
ஆனால்
எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள்
செய்கிறார்களோ, அவர்களுக்கு
அவர்களுக்குரிய
நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்)
கொடுப்பான்;. இன்னும்
தன் அருளினால்
அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்;. எவர்
அவனுக்கு வழிபடுதலைக்
குறைவாக எண்ணி
கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை
நோவினை செய்யும்
வேதனைக் கொண்டு
வேதனை செய்வான்;. அல்லாஹ்வைத்
தவிர, (வேறு எவரையும்)
அவர்கள் தம் உற்ற
நேசனாகவோ, உதவி
புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள்.
[4:174]
மனிதர்களே!
உங்கள் இறைவனிடமிருந்து
உங்களுக்கு (உறுதியான)
அத்தாட்சி வந்து
விட்டது. தெளிவான பேரொளியையும்
உங்களிடம் இறக்கி
வைத்துள்ளோம்.
[4:175]
ஆகவே, யார்
அல்லாஹ்வின் மீது ஈமான்
கொண்டு, அவ(ன் அருளிய
நேர் வழியி)னை
பலமாகப் பிடித்துக்
கொள்கிறார்களோ, அவர்களைத்
தன் ரஹமத்திலும், அருளிலும்
புகச் செய்கிறான்;. இன்னும்
தன்னிடம் (அவர்கள்
வந்து) சேரக்கூடிய
நேரான வழியிலும்
அவர்களைச் செலுத்துவான்.