[5:6]
முஃமின்களே!
நீங்கள் தொழுகைக்குத்
தயாராகும்போது, (முன்னதாக)
உங்கள் முகங்களையும், முழங்கைகள்
வரை உங்கள்
இரு கைகளையும், கழுவிக்
கொள்ளுங்கள்;. உங்களுடைய
தலைகளை (ஈரக்கையால்) தடவி
(மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள்
கால்களை இரு கணுக்கால்
வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)
- நீங்கள் பெருந்தொடக்குடையோராக
(குளிக்கக் கடமைப்
பட்டோராக) இருந்தால்
குளித்து(த் தேகம்
முழுவதையும் சுத்தம்
செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள
நோயாளிகளாகவோ, அல்லது
பிரயாணத்திலோ
இருந்தால், அல்லது
உங்களில் எவரும்
மல ஜலம் கழித்து
வந்தாலும், அல்லது
நீங்கள் பெண்களைத்
தீண்டி (உடல்
உறவு கொண்டி)ருந்தாலும்
(உங்களைச் சுத்தப்படுத்திக்
கொள்ள) உங்களுக்குத்
தண்ணீர் கிடைக்காவிட்டால்
(தயம்மும் செய்து
கொள்ளுங்கள்;. அதாவது)
சுத்தமான மண்ணைக் (கையினால்
தடவிக்) கொண்டு
அவைகளால் உங்கள்
முகங்களையும், உங்களுடைய
கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ்
உங்களை வருத்தக்
கூடிய எந்த சிரமத்தையும்
கொடுக்க விரும்பவில்லை
- ஆனால் அவன் உங்களைத்
தூய்மைப் படுத்தவும்; இன்னும்
நீங்கள் அவனுக்கு
நன்றி செலுத்தும்
பொருட்டு, தனது
அருட்கொடையை உங்கள்
மீது முழுமையாக்கவும்
விரும்புகிறான்.
[5:7]
மேலும், உங்கள்
மீதுள்ள அல்லாஹ்வின்
அருளையும், அவன்
உங்களிடம் வாக்குறுதி
வாங்கிய பொழுது
நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள்
செவி மடுத்தோம், நாங்கள்
(உனக்கு) வழிப்பட்டோம்" என்று
நீங்கள் கூறியதையும்
நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக
அல்லாஹ் (உங்கள்)
இருதயங்களிலுள்ள
(இரகசியங்களை)
யெல்லாம் நன்கறிந்தவனாக
இருக்கின்றான்.
[5:8]
முஃமின்களே!
நியாயத்தை நிலை நாட்டுவதற்காக
அல்லாஹ்வுக்கு
நீங்கள் உறுதியான
சாட்சியாக இருங்கள், எந்த
ஒரு கூட்டத்தார்
மீதும் நீங்கள்
கொண்டுள்ள வெறுப்பு
நீதி செய்யாமலிருக்க
உங்களைத் தூண்ட
வேண்டாம். நீதி
செய்யுங்கள்;. இதுவே
(தக்வாவுக்கு)
- பயபக்திக்கு
மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்; நிச்சயமாக
அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம்
நன்கு) அறிந்தவனாக
இருக்கின்றான்.
[5:9]
ஈமான்
கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான
(நற்)கூலியையும்
அல்லாஹ் வாக்களித்துள்ளான்.