[5:10]
எவர்
நிராகரித்து, நம் திருவசனங்களையும்
மறுக்கிறார்களோ, அவர்கள்
நரகவாசிகள் ஆவார்கள்.
[5:11]
முஃமின்களே!
ஒரு கூட்டத்தார் தம் கைகளை
உங்களிடம் நீட்(டி
உங்களைக் கொன்று
வி)டத் தீர்மானித்த
போது, உங்களை விட்டு
அவர்கள் கைகளை
தடுத்து அல்லாஹ்
உங்களுக்குப்
புரிந்த அருளை
நினைவு கூறுங்கள்
- ஆகவே, அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்;. இன்னும்
அல்லாஹ்வின் மீதே முஃமின்கள்
(முழுமையாக) நம்பிக்கை
வைக்கட்டும்.
[5:12]
நிச்சயமாக
அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர்
இடத்தில் உறுதி
மொழி வாங்கினான்;. மேலும்
அவர்களிலிருந்து பன்னிரண்டு
தலைவர்களை அனுப்பியுள்ளோம்.
இன்னும் (உறுதி
மொழி வாங்கியபோது) அல்லாஹ்
கூறினான்; "நிச்சயமாக
நான் உங்களுடனேயே
இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை
நிலைநிறுத்தி, ஜக்காத்தும்
கொடுத்து, என் தூதர்களை
விசுவாசித்து, அவர்களுக்கு
உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக
அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக
நான் உங்கள் பாவங்களை
மன்னித்து சதா
நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும்
சுவனபதிகளில்
உங்களை நுழைய வைப்பேன்;. எனவே
இதற்குப் பின்னரும், உங்களில்
எவரேனும் (இம்மார்க்கத்தை)
நிராகரிப்பின்
நிச்சயமாக அவர் நேரான
வழியிலிருந்து
தவறிவிட்டார்."
[5:13]
அப்பால், அவர்கள்
தம் உடன்படிக்கையை
முறித்து விட்டதால்
நாம் அவர்களைச்
சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை
இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய
(சரியான) இடங்களிலிருந்து அவர்கள்
மாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த
போதனையின் (பெரும்) பகுதியை
மறந்து விட்டார்கள்;. ஆகவே
அவர்களில் சிலரைத்
தவிர அவர்களில் பெரும்பாலோரின்
மோசடியைப் பற்றி
(நபியே!) நீர் தவறாமல்
கண்டு கொண்டே இருப்பீர். எனவே
நீர் அவர்களை மன்னத்துப்
புறக்கணித்து
விடுவீராக. மெய்யாகவே
நன்மை செய்வோரை அல்லாஹ்
நேசிக்கிறான்.