[5:18]
யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள்
அல்லாஹ்வின் குமாரர்கள்
என்றும்' அவனுடைய
நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.
அப்படியாயின்
உங்கள் பாவங்களுக்காக
உங்களை அவன் ஏன்
வேதனைப் படுத்துகிறான்.
அப்படியல்ல! "நீங்கள்
அவன் படைத்தவற்றைச்
சேர்ந்த மனிதர்கள்தாம்"
என்று
(நபியே!) நீர் கூறும். தான்
நாடியவர்களை அவன்
மன்னிக்கிறான்.
தான் நாடியவர்களைத்
தண்டிக்கவும்
செய்கிறான். இன்னும்
வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும்
இருக்கும் எல்லாவற்றின்
மீதுமுள்ள ஆட்சி
அவனுக்கே உரியது. மேலும், அவன்
பக்கமே (எல்லோரும்)
மீள வேண்டியிருக்கின்றது.
[5:19]
வேதமுடையவர்களே!
நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின்
இதுவரையிலும்)
தூதர்கள் வராது
இடைப்பட்டிருந்த
காலத்தில், "நன்மாராயங்
கூறுபவரும், அச்சமூட்டி
எச்சரிப்பவரும்
ஆகிய எவரும் எங்களிடம் வரவே
இல்லையே" என நீங்கள்
கூறாதிருக்கும்
பொருட்டு, இப்பொழுது
உங்களுக்கு (மார்க்கத்தைத்)
தெளிவாக எடுத்துக்கூற
நம் தூதர் உங்களிடம்
வந்துள்ளார். எனவே நன்மாராயம்
கூறுபவரும், அச்சமூட்டி
எச்சரிப்பவரும்
உங்களிடம் நிச்சயமாக
வந்து விட்டார்.
இன்னும்; அல்லாஹ்
எல்லாப் பொருட்கள்
மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
[5:20]
அன்றி, மூஸா
தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தோரே!
அல்லாஹ் உங்கள்
மீது புரிந்திருக்கும் அருட்கொடையை
நினைத்துப் பாருங்கள்;. அவன்
உங்களிடையே நபிமார்களை
உண்டாக்கி, உங்களை
அரசர்களாகவும்
ஆக்கினான்;. உலக மக்களில்
வேறு யாருக்கும்
கொடுக்காததை உங்களுக்குக்
கொடுத்தான்" என்று
அவர் கூறியதை
(நபியே! இவர்களுக்கு)
நினைவு கூறும்.
[5:21]
(தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக
அல்லாஹ் விதித்துள்ள
புண்ணிய பூமியில்
நுழையுங்கள்;. இன்னும்
நீங்கள் புறமுதுகு
காட்டி திரும்பி
விடாதீர்கள்;. (அப்படிச்
செய்தால்) நீ;ங்கள் நஷ்ட
மடைந்தவர்களாகவே
திரும்புவீர்கள்" என்றும்
கூறினார்.
[5:22]
அதற்கு
அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த
இடத்)தில் மிகவும்
பலசாலிகளான கூட்டத்தார்
இருக்கின்றார்கள். எனவே
அவர்கள் அதைவிட்டு
வெளியேறாத வரையில்
நாங்கள் அதில்
நுழையவே மாட்டோம். அவர்கள்
அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக
நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.
[5:23]
(அல்லாஹ்வை)
பயந்து கொண்டிருந்தோரிடையே
இருந்த இரண்டு
மனிதர்கள் மீது
அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை
நோக்கி;) "அவர்களை
எதிர்த்து வாயில்
வரை நுழையுங்கள்.
அது வரை நீங்கள்
நுழைந்து விட்டால், நிச்சயமாக
நீங்களே வெற்றியாளர்கள்
ஆவீர்கள், நீங்கள்
முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின்
மீதே நம்பிக்கை
வையுங்கள்" என்று
கூறினர்.