[5:32]
இதன்
காரணமாகவே, "நிச்சயமாக
எவன் ஒருவன் கொலைக்குப்
பதிலாகவோ அல்லது
பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த்
தடுப்பதற்காகவோ)
அன்றி, மற்றொருவரைக்
கொலை செய்கிறானோ
அவன் மனிதர்கள்
யாவரையுமே கொலை
செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர்
ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ
அவர் மக்கள் யாவரையும்
வாழ வைப்பவரைப்
போலாவார்" என்று இஸ்ராயீலின்
சந்ததியினருக்கு
விதித்தோம். மேலும், நிச்சயமாக
நம் தூதர்கள் அவர்களிடம்
தெளிவான அத்தாட்சிகளைக்
கொண்டு வந்தார்கள்; இதன்
பின்னரும் அவர்களில் பெரும்பாலோர்
பூமியில் வரம்பு
கடந்தவர்களாகவே
இருக்கின்றனர்.
[5:33]
அல்லாஹ்வுடனும்
அவன் துதருடனும்
போர் புரிந்து, பூமியில்
குழப்பம் செய்து
கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை
இதுதான்; (அவர்கள்)
கொல்லப்படுதல், அல்லது
தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால்
மாறு கை வாங்கப்படுதல், அல்லது
நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில்
ஏற்படும் இழிவாகும்;. மறுமையில்
அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
[5:34]
நீங்கள்
அவர்கள் மீது சக்தி பெறுமுன்
திருந்திக் கொள்கிறார்களே
அவர்களைத் தவிர, நிச்சயமாக
அல்லாஹ் மன்னிப்பவனாகவும்
கருணையுடையவனாகவும்
இருக்கின்றான்
என்பதை நீங்கள்
அறிந்து கொள்ளுங்கள்.
[5:35]
முஃமின்களே!
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால்
நெருங்குவதற்குரிய
வழியை(வணக்கங்களின்
மூலம்) தேடிக் கொள்ளுங்கள்;. அவனுடைய
பாதையில் போர்
புரியுங்கள்; அப்பொழுது
நீங்கள் வெற்றி பெறலாம்.
[5:36]
நிச்சயமாக, நிராகரிப்போர்கள்
- அவர்களிடம்
இப்பூமியிலுள்ள
அனைத்தும், இன்னும்
அதனுடன் அது போன்றதும்
இருந்து, அவற்றை, மறுமையின்
வேதனைக்குப் பகரமாக
அவர்கள் இழப்பீடாகக்
கொடுத்தாலும், அவர்களிடமிருந்து
அவை ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டா. மேலும்
அவர்களுக்கு நோவினை
செய்யும் வேதனை
உண்டு.