[5:51]
முஃமின்களே!
யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்
உங்களுடைய பாதுகாவலர்களாக
ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
(உங்களுக்கு விரோதம்
செய்வதில்) அவர்கள்
தம்மில் சிலர்
சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்.
உங்களில் எவரேனும்
அவர்களைப் பாதுகாவலர்களாக
ஆக்கினால் நிச்சயமாக அவரும்
அவர்களைச் சேர்ந்தவர்தான்.
நிச்சயமாக அல்லாஹ்
அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி
காட்டமாட்டான்.
[5:52]
எனவே
(நபியே!) எவர் இருதயங்களில்
நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம்
அவர்களிடம் விரைந்து
செல்வதை நீர்
காண்பீர். (அவர்களைப்
பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு
ஏதாவது துன்பச்சுழல்
ஏற்படுமோ என்று
அஞ்சுகிறோம்" என அவர்கள்
கூறுகிறார்கள்; அல்லாஹ்
(தான் நாடியபடி)
தன்னிடமிருந்து
(உங்களுக்கு) ஒரு
வெற்றியையோ அல்லது ஏதாவது
ஒரு (நற்) காரியத்தையோ
கொடுத்து விடலாம்;. அப்பொழுது
அவர்கள் தம் உள்ளங்களில்
மறைத்து வைத்திருந்ததைப்
பற்றி கைசேதமடைந்தோராக
ஆகிவிடுவார்கள்.
[5:53]
(மறுமையில்
இவர்களைச் சுட்டிக் காண்பித்து)
கூறுவார்கள்; "நிச்சயமாக
நாங்களும் உங்களுடன்
இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின்
மீது உறுதியான
சத்தியம் செய்து
கொண்டிருந்தவர்கள்
இவர்கள் தானா?" என்று
முஃமின்கள் கூறுவார்கள்.
இவர்களுடைய செயல்கள்
(எல்லாம்)
அழிந்துவிட்டன. இன்னும்
இவர்கள் நஷ்டவாளிகளாக
ஆகிவிட்டனர்.
[5:54]
முஃமின்களே!
உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு
மாறிவிட்டால்
(அல்லாஹ்வுக்கு
அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது
அல்லாஹ் வேறு ஒரு
கூட்டத்தாரைக்
கொண்டு வருவான்;. அவன்
அவர்களை நேசிப்பான்;. அவனை
அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள்
முஃமின்களிடம்
பணிவாக நடந்து
கொள்வார்கள்;. காஃபிர்களிடம்
கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில்
போர் செய்வார்கள்;. நிந்தனை
செய்வோரின் நிந்தனைக்கு
அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின்
அருட்கொடையாகும்;. இதை அவன்
நாடியவருக்குக்
கொடுக்கின்றான்;. அல்லாஹ்
மிகவும் விசாலமானவனும்
(எல்லாம்) நன்கறிந்தவனுமாக
இருக்கின்றான்.
[5:55]
நிச்சயமாக
உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய
தூதரும்;. எவர்
ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும்
கொடுத்து, (அல்லாஹ்வின்
கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும்
வருகிறார்களோ
அவர்கள்தாம்.
[5:56]
அல்லஹ்வையும்
அவனது தூதரையும் முஃமின்களையும்
யார் நேசர்களாக
ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம்
ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின்
கூட்டத்தினர்)
ஆவார்கள்;. நிச்சயமாக
இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
[5:57]
முஃமின்களே!
உங்களுக்குமுன் வேதம்
வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார்
உங்கள் மார்க்கத்தைப்
பரிகாசமாகவும், விளையாட்டாகவும்
எடுத்துக் கொள்கிறார்களோ
அவர்களை நீங்கள்
பாதுபாவலர்களாக
ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள்
முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே
அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.