[5:77]
வேதமுடையவர்களே!
நீங்கள் உங்கள்
மார்க்கத்தில்
உண்மையில்லாததை
கூறி வரம்பு மீறாதீர்கள்.
(உங்களுக்கு) முன்பு
வழிதவறிச் சென்ற
கூட்டத்தாரின்
மனோ இச்சைகளை நீ;ங்கள்
பின்பற்றாதீர்கள்;. அநேகரை
அவர்கள் வழி தவறச்
செய்ததுடன், தாங்களும்
நேர் வழியை விட்டு
விலகி விட்டனர்
என்று (நபியே!) நீர்
கூறுவீராக!
[5:78]
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி
விட்டவர்கள், தாவூது, மர்யமின்
குமாரர் ஈஸா ஆகிய இவர்களின்
நாவால் சபிக்கப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் அவர்கள்
(இறைவனின் கட்டளைக்கு) மாறு
செய்து கொண்டும், வரம்பு
மீறி நடந்து கொண்டும்
இருந்தார்கள்.
[5:79]
இன்னும்
தாம் செய்து கொண்டிருந்த
தீய காரியங்களைவிட்டு
ஒருவரையொருவர்
தடுப்போராகவும்
அவர்கள் இருக்கவில்லை.
அவர்கள் செய்து
கொண்டிருந்தவையெல்லாம்
நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
[5:80]
(நபியே!) அவர்களில்
அநேகர் காஃபிர்களையே
உற்ற நண்பர்களாகக்
கொண்டிருப்பதை
நீர் காண்பீர்.
அவர்கள் தமக்காக முற்கூட்டியே
அனுப்பிவைத்தது
நிச்சயமாக கெட்டதேயாகும்.
ஏனெனில் அல்லாஹ்வின் கோபம்
அவர்கள் மீதுள்ளது.
மேலும் வேதனையில்
அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[5:81]
அவர்கள்
அல்லாஹ்வின் மீதும் நபியின்
மீதும், அவர் மீது
இறக்கப்பட்ட (வேதத்)தின்
மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத்
(தங்களின்) உற்ற
நண்பர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் அவர்களில்
அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
[5:82]
நிச்சயமாக
யூதர்களையும், இணைவைப்பவர்களையும்
முஃமின்களுக்குக்
கடும் பகைவர்களாகவே
(நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக
நாங்கள் கிறிஸ்தவர்களாக
இருக்கின்றோம்"
என்று சொல்பவர்களை,
முஃமின்களுக்கு
நேசத்தால் மிகவும்
நெருங்கியவர்களாக
(நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால்
அவர்களில் கற்றறிந்த
குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்.
மேலும் அவர்கள்
இறுமாப்புக் கொள்வதுமில்லை.