[5:109]
(நபியே!) அல்லாஹ்
தன் தூதர்களை ஒன்று
கூட்டும் (ஒரு)
நாளில் அவர்களிடம் "(நீங்கள்
மனிதர்களுக்கு
என் தூதைச்
சேர்ப்பித்தபோது)
என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று
கேட்பான். அதற்கு
அவர்கள்; "அதுபற்றி
எங்களுக்கு எந்த
அறிதலும் இல்லை.
நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம்
அறிந்தவன்" என்று
கூறுவார்கள்.
[5:110]
அப்பொழுது
அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய
மகன் ஈஸாவே நான்
உம்மீதும், உம் தாயார்
மீதும் அருளிய
என் நிஃமத்தை
(அருள் கொடையயை)
நினைவு கூறும்.
பரிசுத்த ஆன்மாவைக்
கொண்டு உமக்கு உதவியளித்து, நீர்
தொட்டிலிலும்
(குழந்தைப் பருவத்திலும்), வாலிபப்
பருவத்திலும் மனிதர்களிடம்
பேசச் செய்ததையும், இன்னும்
நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும்
கற்றுக் கொடுத்ததையும்
(நினைத்துப் பாரும்).
இன்னும் நீர்
களிமண்ணினால்
என் உத்தரவைக்
கொண்டு பறவை வடிவத்தைப்
போலுண்டாக்கி
அதில் நீர்
ஊதியபோது அது என்
உத்தரவைக் கொண்டு
பறவையாகியதையும், இன்னும்
என் உத்தரவைக் கொண்டு
பிறவிக் குருடனையும், வெண்
குஷ்டக்காரளையும்
சுகப்படுத்தியதையும், (நினைத்துப்
பாரும்). இறந்தோரை
என் உத்தரவைக்
கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து)
வெளிப்படுத்தியதையும்
(நினைத்துப் பாரும்).
அன்றியும் இஸ்ராயீலின்
சந்ததியினரிடம்
நீர் தெளிவான அத்தாட்சிகளைக்
கொண்டு வந்தபோது, அவர்களில்
நிராகரித்தவர்கள், "இது தெளிவான
சூனியத்தைத் தவிர
வேறு இல்லை" என்று
கூறியவேளை, அவர்கள்
(உமக்குத் தீங்கு
செய்யாதவாறு) நான் தடுத்து
விட்டதையும் நினைத்துப்
பாரும்.
[5:111]
என்
மீதும் என் தூதர்
மீதும் ஈமான்
கொள்ளுங்கள் என்று
நான் ஹவாரிய்யூன்
(சீடர்)களுக்கு
தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள்
ஈமான் கொண்டோம், நிச்சயமாக
நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு
வழிப்பட்டவர்கள்)
என்பதற்கு நீங்களே
சாட்சியாக இருங்கள்" என்று
கூறினார்கள்.
[5:112]
மர்யமுடைய
மகன் ஈஸாவே! உங்கள் இறைவன்
வானத்திலிருந்து
எங்களுக்காக உணவு
மரவையை (ஆகாரத்
தட்டை) இறக்கி
வைக்க முடியுமா? என்று
ஹவாரிய்யூன் (சீடர்)கள்
கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக
இருந்தால், அல்லாஹ்வை
அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று
கூறினார்.
[5:113]
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து
புசித்து எங்கள்
இதயங்கள் அமைதி
பெறவும், நிச்சயமாக
நீங்கள் எங்களுக்கு
உண்மையையே கூறினீர்கள்
என்பதை அறிந்து
கொள்ளவும், இன்னும்
நாங்கள் அதைப்பற்றி
சாட்சி கூறக் கூடியவர்களாகவும்
இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.