Al-An‘âm
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[6:1]
எல்லாப்
புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.
அவனே வானங்களையும், பூமியையும்
படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே
உண்டாக்கினான்;, அப்படியிருந்தும்
நிராகரிப்பவர்கள்
தம் இறைவனுக்கு(ப்
பிற பொருட்களைச்)
சமமாக்குகின்றனர்.
[6:2]
அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து
படைத்துப் பின்னர்
(உங்களுக்கு ஒரு
குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்;, இன்னும், (உங்களைக்
கேள்விகணக்கிற்கு
எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட
தவணையும் அவனிடமே
உள்ளது. அப்படியிருந்தும்
நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
[6:3]
இன்னும்
வானங்களிலும் பூமியிலும்
அவனே (ஏக நாயனாகிய)
அல்லாஹ்; உங்கள்
இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும்
அவன் அறிவான்; இன்னும்
நீங்கள் (நன்மையோ
தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம்
அவன் அறிவான்.
[6:4]
(அவ்வாறு
இருந்தும்,) தங்கள் இறைவனுடைய
திருவசனங்களிலிருந்து
எந்த வசனம் அவர்களிடம்
வந்தபோதிலும்
அதை அவர்கள் புறக்கணிக்கவே
செய்கின்றனர்.
[6:5]
எனவே, சத்திய
(வேத)ம் அவர்களிடம்
வந்திருக்கும்
போதும் அதனைப்
பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப்
(பொய்யென்று) பரிகசித்துக்
கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே
தீரும்.
[6:6]
அவர்களுக்கு
முன்னர் நாம் எத்தனையோ
தலைமுறையினரை
அழித்திருக்கிறோம்
என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா? பூமியில்
நாம் உங்களுக்கு
செய்து தராத வசதிகளையெல்லாம்
அவர்களுக்குச்
செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள்
மீது நாம் வானம்
தாரை தரையாக மழை
பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக்
கீழே ஆறுகள் செழித்தோடும்படிச்
செய்தோம்; பிறகு
அவர்களின் பாவங்களின்
காரணத்தால் அவர்களை
அழித்து விட்டோம்; அவர்களுக்குப்
பின் வேறு தலைமுறைகளை
உண்டாக்கினோம்.
[6:7]
காகிதத்தில்
(எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே
நாம் உம் மீது
இறக்கி வைத்து, அதனை
அவர்கள் தம் கைகளால்
தொட்டுப் பார்த்தபோதிலும், "இது பகிரங்கமான
சூனியத்தைத்தவிர
வேறில்லை என்று அந்நிராகரிப்போர்
நிச்சயமாக சொல்வார்கள்.
[6:8]
(இவர் உண்மையான
தூதர் என்று சாட்சி
கூற) இவர் மீது
ஒரு மலக்கு இறக்கப்பட
வேண்டாமா? என அவர்கள்
கூறுகின்றனர்; (அவ்வாறு)
நாம் ஒரு மலக்கை
இறக்கி வைப்போமானால்
(அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு
அவர்களுக்குச்
சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.