[6:9]
நம்
தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும்
(அவர்கள் மலக்கை
காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்)
அவரையும் நாம்
மனித உருவத்திலேயே
ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த
இடத்தில் அவர்கள்
(இப்பொழுது) குழம்பிக்
கொள்வது போல்
(அப்பொழுதும்)
நாம் குழப்பத்தை
ஏற்படுத்தியிருப்போம்.
[6:10]
(நபியே!) உமக்கு
முன்னர் வந்த தூதர்களும்
நிச்சயமாக (இவ்வாறே)
பரிகசிக்கப்பட்டனர்; முடிவில்
அவர்கள் எதைப் பரிகசித்துக்
கொண்டிருந்தனரோ
அதுவே பரிகசித்தவர்களை
வந்து சூழ்ந்துகொண்டது.
[6:11]
பூமியில்
நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின்
வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின்
முடிவு என்ன ஆயிற்று என்பதை
நீங்கள் கவனித்துப்
பாருங்கள் என்று
(நபியே!) நீர் கூறுவீராக.
[6:12]
வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச்
சொந்தம் என்று
(நபியே!) நீர் (அவர்களைக்)
கேளும்; (அவர்கள் என்ன பதில்
கூறமுடியும்? எனவே) "எல்லாம்
அல்லாஹ்வுக்கே
சொந்தம்" என்று கூறுவீராக
அவன் தன் மீது
கருணையை கடமையாக்கிக்
கொண்டான்; நிச்சயமாக
இறுதி நாளில் உங்களையெல்லாம்
அவன் ஒன்று சேர்ப்பான்; இதில்
எவ்வித சந்தேகமும்
இல்லை எவர்கள் தமக்குத்
தாமே நஷ்டத்தை
உண்டுபண்ணிக்
கொண்டார்களோ, அவர்கள்
ஈமான் கொள்ளமாட்டார்கள்.
[6:13]
இரவிலும்
பகலிலும் வசித்திருப்பவை
எல்லாம் அவனுக்கே
சொந்தம்; அவன்
(யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும்
இருக்கின்றான்.
[6:14]
வானங்களையும்
பூமியையும் படைத்த
அல்லாஹ்வையன்றி
வேறு எவரையும்
என் பாதுகாவலனாக
எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்)
உணவளிக்கிறான்; அவனுக்கு
எவராலும் உணவளிக்கப்
படுவதில்லை என்று (நபியே!)
நீர் கூறுவீராக
இன்னும் (அல்லாஹ்வுக்கு
வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி
நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்)
என்று கூறுவீராக. இன்னும்
நீர் ஒருக்காலும்
இணைவைப்போரில்
ஒருவராகிவிட வேண்டாம்.
[6:15]
நான்
என் இறைவனுக்கு
மாறு செய்தால், மகத்தான
நாளில் (ஏற்படும்)
வேதனையை நான் நிச்சயமாக
பயப்படுகிறேன் என்று
கூறுவீராக.
[6:16]
அந்தாளில்
எவரொருவர் அந்த வேதனையை
விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக
(அல்லாஹ்) அவர்மீது
கிருபை புரிந்துவிட்டான்.
இது மிகத் தெளிவான
வெற்றியாகும்
(என்று கூறுவீராக).
[6:17]
(நபியே!) அல்லாஹ்
உமக்கு ஏதாவதொரு
துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத்
தவிர (வேறு யாரும்)
அதை நீக்க முடியாது.
இன்னும் அவன் ஒரு
நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும்
தடுக்க முடியாது.)
அவன் எல்லாப் பொருட்கள் மீதும்
பேராற்றலுடையவனாக
இருக்கின்றான்.
[6:18]
அவனே
தன் அடியார்களை
அடக்கியாள்பவன், இன்னும்
அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்)
நன்கறிந்தவன்.