[6:53]
நமக்கிடையில்
(ஏழைகளாகிய) இவர்கள்
மீதா அல்லாஹ் அருள்புரிந்து
விட்டான்? என்று
(செல்வந்தர்கள்)
கூற வேண்டுமென்பதற்காக
அவர்களில் சிலரை
சிலரைக்கொண்டு
நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி
செலுத்துபவர்களை
அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
[6:54]
நம்
வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம்
வந்தால், "ஸலாமுன்
அலைக்கும் (உங்கள்
மீது சாந்தியும்
சமாதானமும் உண்டாவதாக)" என்று
(நபியே!) நீர் கூறும், உங்கள்
இறைவன் கிருபை
செய்வதைத் தன் மீது
கடமையாக்கிக்
கொண்டான்; உங்களில்
எவரேனும் அறியாமையினால்
ஒரு தீமையைச் செய்து
விட்டு அதற்குப்
பின், பாவத்தை விட்டும்
திரும்பி, திருத்திக்
கொண்டால், நிச்சயமாக
அவன் (அல்லாஹ்)
மன்னிப்பவனாகவும், மிக்க
கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
[6:55]
குற்றவாளிகளின்
வழி (இன்னதென்று சந்தேகமின்றித்)
தெளிவாகுவதற்காக
நாம் (நம்) வசனங்களை
இவ்வாறு விவரிக்கின்றோம்.
[6:56]
நீங்கள்
அல்லாஹ்வையன்றி
வேறு எவர்களை(க்
கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ
அவர்களை வணங்கக்
கூடாதென்று நான் நிச்சயமாக
தடுக்கப்பட்டு
உள்ளேன் (என்று
நபியே!) நீர் கூறுவீராக "உங்களுடைய மன இச்சைகளை
நான் பின்பற்ற
மாட்டேன்; (நான்
அப்படிச் செய்தால்)
நான் நிச்சயமாக வழி தவறி
விடுவேன்; மேலும்
நான் நேர்வழி பெற்றவர்களிலும்
இருக்கமாட்டேன்" என்றும்
(நபியே!) நீர் கூறுவீராக.
[6:57]
பின்னும்
நீர் கூறும்; "நான்
என்னுடைய ரப்பின்
தெளிவான அத்தாட்சியின்
மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ
அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
நீங்கள் எதற்கு
அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து
என் அதிகாரத்தில்
இல்லை அதிகாரம்
அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை
சத்தியத்தையே
அவன் கூறுகின்றான், தீர்ப்பு
வழங்குவோரில்
அவனே மிகவும் மேலானவனாக
இருக்கிறான்.
[6:58]
(நபியே!) நீர்
கூறும்; "நீங்கள் எதற்கு
அசவரப்படுகின்றீர்களோ
அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும்
எனக்குமிடையேயுள்ள
விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ்
அநியாயம் செய்வோரை
நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."
[6:59]
அவனிடமே
மறைவானவற்றின் திறவுகோல்கள்
இருக்கின்றன. அவற்றை
அவனன்றி எவரும்
அறியார். மேலும்
கரையிலும் கடலிலும்
உள்ளவற்றையெல்லாம்
அவன் அறிவான்; அவன்
அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை.
பூமியின் (ஆழத்தில்
அடர்ந்த) இருள்களில்
கிடக்கும் சிறு
வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும்
(எந்தப் பொருளும்)
தெளிவான (அவனுடைய)
பதிவேட்டில் இல்லாமலில்லை.