[6:74]
இப்றாஹீம்
தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா
நீர் தெய்வங்களாக
எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும்
உம் சமூகத்தாரையும், பகிரங்கமான
வழி கேட்டில் இருப்பதை
நிச்சயமாக பார்க்கிறேன்" என்று
கூறியதை நினைத்துப்பாரும்.
[6:75]
அவர்
உறுதியான நம்பிக்கையுடையவராய்
ஆகும் பொருட்டு
வானங்கள், பூமி
இவற்றின் ஆட்சியை இப்றாஹீமுக்கு
இவ்வாறு காண்பித்தோம்.
[6:76]
ஆகவே
அவரை இரவு மூடிக் கொண்டபோது
அவர் ஒரு நட்சத்திரத்தைப்
பார்த்தார்; "இதுதான்
என் இறைவன்!" என்று
கூறினார்; ஆனால்
அது மறைந்த போது
அவர், "நான் மறையக் கூடியவற்றை
நேசிக்க மாட்டேன்" என்று
சொன்னார்.
[6:77]
பின்னர்
சந்திரன் (பிரகாசத்துடன்)
உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே
என் இறைவன்" என்று கூறினார்.
ஆனால் அது மறைந்த
போது அவர், "என் இறைவன்
எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான்
நிச்சயமாக வழி
தவறியவர்கள் கூட்டத்தில்
(ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று
கூறினார்.
[6:78]
பின்
சூரியன் (மிக்க
ஒளியுடன்) உதயமாவதைக்
கண்டபோது "இதுவே
என் இறைவன்; இது எல்லாவற்றிலும்
பெரியது" என்று
அவர் கூறினார்.
அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே!
நீங்கள் (ஆண்டவனுக்கு)
இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்)
விட்டு நிச்சயமாக
நான் விலகி விட்டேன்" என்று
கூறினார்.
[6:79]
வானங்களையும்
பூமியையும் படைத்தவன்
பக்கமே நான் உறுதியாக
என் முகத்தைத்
திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக
- (இணைவைப் போரில்
ஒருவனாக) இருக்க
மாட்டேன் (என்று
கூறினார்).
[6:80]
அவருடன்
அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப்
பற்றியா என்னிடம்
தர்க்கம் செய்கிறீர்கள்? அவன்
நிச்சயமாக எனக்கு
நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள்
அவனுக்கு இணையாக்குபவற்றைப்
பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன்
எதையாவது நாடினாலன்றி (எதுவும்
நிகழ்ந்து விடாது); என் இறைவன்
(தன்) ஞானத்தால்
எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள்
சிந்திக்க வேண்டாமா?" என்று
கூறினார்.
[6:81]
உங்களுக்கு
அவன் எந்த அத்தாட்சியும்
இறக்கி வைக்காமலிருக்கும்போது
நீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைவைப்பது பற்றி
பயப்படவில்லை
- அப்படியிருக்க
நீங்கள் (அவனுக்கு)
இணைவைப்பவற்றுக்கு
நான் எப்படி
பயப்படுவேன்? நம் இருபிரிவினரில்
அச்சமின்றி இருக்கத்தகுதி
உடையவர் யார்? நீங்கள்
அறிந்தவர்களாக
இருந்தால், (கூறுங்கள்
எனவும் கேட்டார்)