[6:138]
இன்னும்
அவர்கள் (தம் கால்நடைகளைக்
குறிப்பிட்டு) "ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில்
காணும் இந்த விளைச்சல்
ஆகியவற்றை நாம்
விரும்புபவர்களைத்
தவிர வேறு யாரும்
புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது" என்று
கூறுகின்றனர்; மேலும்
சில கால்நடைகளைச்
சவாரி செய்யவும், சுமைகளைச்
சுமந்து செல்லவும்
பயன் படுத்துவது
தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும்
சில கால்நடைகளை
அறுக்கும்போது
அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின்
மீது பொய்யாகக்
கற்பனை செய்து
சொல்கிறார்கள். (அல்லாஹ்)
அவர்களுடைய பொய்க்
கூற்றுகளுக்காக
அவர்களுக்குக்
கூலி கொடுப்பான்.
[6:139]
மேலும்
அவர்கள், "இந்தக் கால்
நடைகளின் வயிற்றில்
இருக்கும் குட்டிகள்
எங்கள் ஆண்களுக்கு
மட்டுமே சொந்தம்.
அவை எங்கள் பெண்களுக்குத்
தடுக்கப்பட்டுள்ளன
- அவை செத்துப்
பிறந்தால், அவற்றில்
அவர்களுக்கும்
பங்கு உண்டு" என்றும்
கூறுகிறார்கள்; அவர்களுடைய
(இந்தப் பொய்யான)
கூற்றுக்கு அவன்
தக்க கூலி கொடுப்பான்
- நிச்சயமாக அவன்
பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்)
அநிந்தவனுமாக
இருக்கின்றான்.
[6:140]
எவர்கள்
அறிவில்லாமல் மூடத்தனமாக
தம் குழந்தைகளைக்
கொலை செய்தார்களோ
இன்னும் தங்களுக்கு
அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை
அல்லாஹ்வின் மீது
பொய் கூறி (ஆகாதென்று)
தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள்
வழிகெட்டு விட்டனர், நேர்வழி
பெற்றவர்களாக
இல்லை.
[6:141]
பந்தல்களில்
படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத
செடிகளும், பேரீத்த
மரங்களும் உள்ள
சோலைகளையும், புசிக்கத்தக்க
விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும்
வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும்
ஜைத்தூன் (ஒலிவம்)
மாதுளை ஆகியவற்றையும், அவனே
படைத்தான். ஆகவே அவை பலனளித்தால்
அவற்றின் பலனிலிருந்து
புசியுங்கள். அவற்றை
அறுவடை செய்யும் காலத்தில்
அதற்குரிய (கடமையான)
பாகத்தைக் கொடுத்து
விடுங்கள். வீண்
விரயம் செய்யாதீர்கள்-
நிச்சயமாக அவன்
(அல்லாஹ்) வீண்
விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
[6:142]
இன்னும்
கால்நடைகளில்
சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும்
உள்ளன. அல்லாஹ்
உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள்
- நீங்கள் ஷைத்தானின்
அடிச்சுவடுகளைப்
பின்பற்றாதீர்கள்-
நிச்சயமாக அவன்
உங்களுக்கு பகிரங்கமான
பகைவனாவான்.