[6:147]
நபியே!)
இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய
இறைவன் விசாலமான
கருணையுடையவன்தான்; (எனினும்)
குற்றம் செய்த
கூட்டத்தாரைவிட்டு
அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
[6:148]
(அல்லாஹ்வுக்கு
இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் "அல்லாஹ்
நாடியிருந்தால், நாங்களும்
எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க
மாட்டோம்; நாங்கள்
எந்தப் பொருளையும்
(எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும்
மாட்டோம்" என்று
கூறுவார்கள் -
இப்படித்தான்
இவர்களுக்கு முன் இருந்தவர்களும்
நமது தண்டனையை
அனுபவிக்கும்
வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை
நோக்கி,) இதற்கு உங்களிடம்
ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால்
அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய
வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும்
நீங்கள் பின்பற்றவில்லை
நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்" என்று
(நபியே!) நீர் கூறும்.
[6:149]
நிரப்பமான
அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது, அவன்
நாடியிருந்தால்
உங்கள் யாவரையும்
அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்
என்று நீர் கூறும்.
[6:150]
நிச்சயமாக
அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான்
என சாட்சி சொல்லக்கூடிய
உங்கள் சாட்சிகளைக்
கொண்டு வாருங்கள் என்று
கூறும்; அவர்கள் சாட்சி
கூறினால், (அவர்கள்
பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன்
சேர்ந்து நீர்
சாட்சி சொல்ல வேண்டாம்
- நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை
நம்பாதவர்கள்
ஆகியோரின் வீணான
மன இச்சைகளை நீர் பின்பற்ற
வேண்டாம் - ஏனெனில்
அவர்கள் தாம் தங்கள்
இறைவனுக்குப்
பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
[6:151]
வாருங்கள்!
உங்கள் இறைவன்
உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்)
நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும்
அவனுக்கு இணையாக
வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு
நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப்
பயந்து உங்கள்
குழந்தைகளைக்
கொல்லாதீர்கள்
- ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும்
நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான
இரகசியமான மானக்கேடான
காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ்
தடுத்துள்ள எந்த
ஓர் ஆத்மாவையும்
நியாயமானதற்கு அல்லாமல்
- கொலை செய்யாதீர்கள்
- இவற்றை நீங்கள்
உணர்ந்து கொள்வதற்காக
(இறைவன்) உங்களுக்கு
(இவ்வாறு) போதிக்கின்றான்.