[6:152]
அநாதையின்
பொருளின் பக்கம்
அவன் பிராயத்தை
அடையும் வரையில்
அழகான முறையிலன்றி நீங்கள்
நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும்
நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம்
எந்த ஆத்மாவையும்
அதன் சக்திக்கு
மீறி கஷ்டப்படுத்துவதில்லை.
நீங்கள் பேசும்பொழுது
அதனால் பாதிக்கப்படுபவர்
நெருங்கிய உறவினராக
இருந்த போதிலும்
- நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு
(நீங்கள் கொடுத்த) உறுதி
மொழியை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் நினைவு
(கூர்ந்து நடந்து)
கொள்ளும் பொருட்டே
அல்லாஹ் உங்களுக்கு
(இவ்வாறு) போதிக்கிறான்.
[6:153]
நிச்சயமாக
இதுவே என்னுடைய
நேரான வழியாகும்; ஆகவே
இதனையே பின்பற்றுங்கள்
- இதர வழிகளை
நீங்கள் பின்பற்ற
வேண்டாம் - அவை
உங்களை அவனுடைய
வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள்
(நேர் வழியைப்
பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு
இவ்வாறு அவன் உங்களுக்கு
போதிக்கிறான்.
[6:154]
ன்மை
செய்பவர்களின்
மீது (நமது அருளைப்)
பூர்த்தியாக்கும்
பொருட்டு பின்னர் மூஸாவுக்கு
நாம் ஒரு வேதத்தைக்
கொடுத்தோம் - அதில்
ஒவ்வொரு விஷயமும்
தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது
அது நேர் வழியாகவும்
அருளாகவும் இருக்கிறது.
அவர்கள் தங்கள்
இறைவனை சந்திப்போம்
என்று உறுதி கொள்ளும்
பொருட்டே (அதைக் கொடுத்தோம்).
[6:155]
(மனிதர்களே!) இதுவும்
வேதமாகும்; இதனை நாமே
இறக்கிவைத்துள்ளோம்
- (இது)
மிக்க பாக்கியம்
வாய்ந்தது ஆகவே
இதனைப் பின்பற்றுங்கள்
- இன்னும் (அவனை)
அஞ்சி (பாவத்தை விட்டு
விலகி)க் கொள்ளுங்கள்.
நீங்கள் (இறைவனால்)
கிருபை செய்யப்படுவீர்கள்.
[6:156]
நமக்கு
முன் இரு கூட்டத்தினர்
மீது மட்டுமே வேதம்
இறக்கப்பட்டது
- ஆகவே நாங்கள்
அதனைப் படிக்கவும்
கேட்கவும் முடியாமல்
பராமுகமாகி விட்டோம்
என்று நீங்கள்
கூறாதிருக்கவும்;
[6:157]
அல்லது
மெய்யாகவே எங்கள்
மீது ஒரு வேதம்
அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள்
அவர்களைவிட மிக்க
நேர்மையாக நடந்திருப்போம்
என்று நீங்கள் கூறாதிருக்கும்
பொருட்டும் (இவ்வேதத்தை
அருளினோம்); ஆகவே
உங்களுடைய இறைவனிடமிருந்தும்
மிகத்தெளிவான
வேதமும், நேர்வழியும், அருளும்
வந்துவிட்டது
- எவனொருவன்
அல்லாஹ்வின் வசனங்களைப்
புறக்கணித்து, அவற்றைவிட்டு
விலகிவிடுகின்றானோ அவனைவிட
அதிக அநியாயக்காரன்
யார்? நம்முடைய வசனங்களை
விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள்
விலகிக் கொண்ட
காரணத்தால் கொடிய
வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.