[2:94]
(நபியே!) "இறைவனிடத்தில் உள்ள மறுமையின்
வீடு (சுவர்க்கம்)
உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது
என்று உரிமை கொண்டாடுவதில்
நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால், (அதைப் பெறுவதற்காக)
மரணத்தை விரும்புங்கள்" என்று
(நபியே!) நீர் சொல்வீராக.
[2:95]
ஆனால், அவர்கள்
கரங்கள் செய்த (பாவங்களை)
அவர்கள் முன்னமேயே
அனுப்பி வைத்திருந்த
காரணத்தால் அவர்கள்
மரணத்தை விரும்பவே
மாட்டார்கள். நிச்சயமாக
அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை
நன்கு அறிந்தவனாகவே
இருக்கிறான்.
[2:96]
அவர்கள், மற்ற
மனிதர்களைவிட, இணை வைக்கும்
முஷ்ரிக்குகளையும்
விட (இவ்வுலக) வாழ்க்கையில்
பேராசை உடையவர்களாக இருப்பதை
(நபியே!) நீர் நிச்சயமாகக்
காண்பீர்; அவர்களில்
ஒவ்வொருவரும்
ஆயிரம் ஆண்டுகள்
வாழவேண்டும் என
ஆசைப்படுகிறார்கள்; ஆனால்
அப்படி அவர்களுக்கு
நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள்
இறைவனின் தண்டனையிலிருந்து
தப்ப முடியாது.
இன்னும் அல்லாஹ்
அவர்கள் செய்வதையெல்லாம்
கூர்ந்து பார்ப்பவனாகவே
இருக்கிறான்.
[2:97]
யார்
ஜிப்ரீலுக்கு
விரோதியாக இருக்கின்றானோ
(அவன் அல்லாஹ்வுக்கும்
விரோதி யாவான்)
என்று (நபியே!)
நீர் கூறும்; நிச்சயமாக
அவர்தாம் அல்லாஹ்வின்
கட்டளைக்கிணங்கி
உம் இதயத்தில் (குர்ஆனை)
இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு
முன்னிருந்த வேதங்கள்
உண்மை என உறுதிப்படுத்துகிறது.
இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை
கொண்டோருக்கு நன்மாராயமாகவும்
இருக்கிறது.
[2:98]
எவன்
அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய
தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக
இருக்கிறானோ, நிச்சயமாக
(அவ்வாறு நிராகரிக்கும்)
காஃபிர்களுக்கு
அல்லாஹ் பகைவனாகவே
இருக்கிறான்.
[2:99]
(நபியே!) நிச்சயமாக
நாம் மிகத்தெளிவான
வசனங்களை உம்மீது
இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத்
தவிர (வேறு எவரும்)
அவற்றை நிராகரிக்க
மாட்டார்கள்.
[2:100]
மேலும், அவர்கள்
உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில்
ஒரு பிரிவினர்
அவற்றை முறித்து
விடவில்லையா? ஆகவே, அவர்களில்
பெரும்பாலோர்
ஈமான் கொள்ள மாட்டார்கள்.
[2:101]
அவர்களிடம்
உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும்
ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து
அவர்களிடம் வந்த
போது, வேதம் வழங்கப்பட்டோரில்
ஒரு பிரிவினர்
அல்லாஹ்வின் வேதத்தைத்
தாங்கள் ஏதும் அறியாதவர்கள்
போல் தங்கள் முதுகுக்குப்
பின்னால் எறிந்து
விட்டார்கள்.