[6:158]
மலக்குகள்
அவர்களிடம் (நேரில்)
வருவதையோ அல்லது
உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ
அல்லது உம் இறைவனின்
அத்தாட்சிகளில்
சில வருவதையோ அன்றி
(வேறெதனையும்) அவர்கள்
எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய
இறைவனின் அத்தாட்சிகளில்
சில வரும் அந்நாளில், இதற்கு
முன்னால் நம்பிக்கை
கொள்ளாமலும், அல்லது
நம்பிக்கைக் கொண்டிருந்தும்
யாதொரு நன்மையையும்
சம்பாதிக்காமலுமிருந்து
விட்டு, அந்நாளில் அவர்கள்
கொள்ளும் நம்பிக்கை
எவ்வித பலனையும்
அவர்களுக்கு அளிக்காது
- ஆகவே அவர்களை நோக்கி
(அந்த அத்தாட்சிகளை)
நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும்
எதிர்ப் பார்க்கின்றோம்" என்று
(நபியே!) நீர் கூறும்.
[6:159]
நிச்சயமாக
எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை
(தம் விருப்பப்படி
பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து
விட்டனரோ அவர்களுடன்
(நபியே!) உமக்கு
எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய
விஷயமெல்லாம்
அல்லாஹ்விடமே
உள்ளது - அவர்கள்
செய்து கொண்டிருந்தவற்றைப்
பற்றி முடிவில்
அவனே அவர்களுக்கு
அறிவிப்பான்.
[6:160]
வர்
ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ
அவருக்கு அதுபோல்
பத்துப் பங்கு
(நன்மை) உண்டு; எவர்
ஒருவர் (ஒரு) தீமையைச்
செய்கிறாரோ அதைப்போன்ற
அளவுடைய கூலியே
கொடுக்கப்படுவார்
- அவர்கள் அநியாயம்
செய்யப்படவும்
மாட்டார்கள்.
[6:161]
(நபியே!) நீர்
கூறும்; "மெய்யாகவே
என் இறைவன் எனக்கு
நேரான பாதையின்
பால் வழி காட்டினான்
- அது மிக்க
உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின்
நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில்
ஒருவராக இருக்கவில்லை.
[6:162]
நீர்
கூறும்; "மெய்யாக என்னுடைய
தொழுகையும், என்னுடைய
குர்பானியும், என்னுடைய
வாழ்வும், என்னுடைய மரணமும்
எல்லாமே அகிலங்களின்
இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
சொந்தமாகும்.
[6:163]
அவனுக்கு
யாதோர் இணையுமில்லை
- இதைக் கொண்டே
நான் ஏவப்பட்டுள்ளேன்
- (அவனுக்கு)
வழிப்பட்டவர்களில்
- முஸ்லீம்களில்
- நான் முதன்மையானவன்
(என்றும் கூறும்).
[6:164]
அல்லாஹ்வை
அன்றி மற்றெவரையாவது
நான் இறைவனாக எடுத்துக்
கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும்
அவனே இறைவனாக இருக்கின்றான்
- பாவம் செய்யும்
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத்
தேடிக்கொள்கிறது
ஓர் ஆத்மாவின்
(பாவச்)சுமையை
மற்றோர் ஆத்மா சுமக்காது.
பின்னர், நீங்கள்
(அனைவரும்) உங்கள்
இறைவன் பக்கமே
திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது
அப்போது நீங்கள்
பிணங்கி விவாதம்
செய்து கொண்டிருந்தவை
பற்றி அவன்
உங்களுக்கு அறிவிப்பான்" என்று
(நபியே!) நீர் கூறும்.
[6:165]
அவன்
தான் உங்களைப்
பூமியில் பின்தோன்றல்களாக
ஆக்கினான்; அவன்
உங்களுக்குக்
கொடுத்துள்ளவற்றில்
உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில்
சிலரைச் சிலரைவிடப்
பதவிகளில் உயர்த்தினான்
- நிச்சயமாக உம் இறைவன்
தண்டிப்பதில்
விரைவானவன். மேலும்
அவன் நிச்சயமாக
மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.