[7:12]
நான்
உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா
செய்யாதிருக்க
உன்னைத் தடுத்தது
யாது? என்று அல்லாஹ்
கேட்டான்; "நான்
அவரை (ஆதமை)விட
மேலானவன் - என்னை
நீ நெருப்பினால்
படைத்தாய், அவரை களிமண்ணால்
படைத்தாய்" என்று
(இப்லீஸ் பதில்)
கூறினான்.
[7:13]
இதிலிருந்து
நீ இறங்கிவிடு, நீ பெருமை
கொள்வதற்கு இங்கு
இடமில்லை, ஆதலால்
(இங்கிருந்து)
நீ வெளியேறு - நிச்சயமாக
நீ சிறுமை அடைந்தோரில்
ஒருவனாகி விட்டாய்
என்று அல்லாஹ்
கூறினான்.
[7:14]
(இறந்தவர்)
எழுப்பப்படும்
நாள் வரை எனக்கு
அவகாசம் கொடுப்பாயாக
என அவன் (இப்லீஸ்)
வேண்டினான்.
[7:15]
(அதற்கு
அல்லாஹ்) "நிச்சயமாக
நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில்
ஒருவனாவாய்"
என்று கூறினான்.
[7:16]
(அதற்கு
இப்லீஸ்) "நீ என்னை
வழி கெட்டவனாக
(வெளியேற்றி) விட்டதன்
காரணத்தால், (ஆதமுடைய
சந்ததியரான) அவர்கள்
உன்னுடைய நேரான
பாதையில் (செல்லாது
தடுப்பதற்காக
அவ்வழியில்) உட்கார்ந்து
கொள்வேன்" என்று
கூறினான்.
[7:17]
பின்
நிச்சயமாக நான்
அவர்கள் முன்னும், அவர்கள்
பின்னும், அவர்கள்
வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும்
வந்து (அவர்களை
வழி கெடுத்துக்)
கொண்டிருப்பேன்; ஆதலால்
நீ அவர்களில்
பெரும்பாலோரை
(உனக்கு) நன்றி
செலுத்துவோர்களாகக்
காணமாட்டாய் (என்றும் கூறினான்).
[7:18]
அதற்கு
இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும்
இங்கிருந்து வெளியேறி
விடு - அவர்களில்
உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள்
யாவரையும் கொண்டு
நிச்சயமாக நரகத்தை
நிரப்புவேன்" என்று
கூறினான்.
[7:19]
(பின்பு
இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும்
சுவர்க்கத்தில்
குடியிருந்து, நீங்கள் இருவரும்
உங்கள் விருப்பப்பிரகாரம்
புசியுங்கள்; ஆனால்
இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச்
செய்தால்) நீங்கள்
இருவரும் அநியாயம்
செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று
அல்லாஹ் கூறினான்).
[7:20]
எனினும்
அவ்விருவருக்கும் மறைந்திருந்த
அவர்களுடைய (உடலை)
மானத்தை அவர்களுக்கு
வெளிப்படுத்தும்
பொருட்டு ஷைத்தான்
அவ்விருவரின்
உள்ளங்களில் (தவறான
எண்ணங்களை) ஊசலாடச்
செய்தான்; (அவர்களை
நோக்கி, "அதன் கனியை
நீங்கள் புசித்தால்)
நீங்கள் இருவரும் மலக்குகளாய்
விடுவீர்கள், அல்லது
(இச்சுவனபதியில்)
என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி
(வேறெதற்கும்,) இந்த
மரத்தை விட்டும்
உங்களை உங்கள்
இறைவன் தடுக்கவில்லை" என்று
கூறினான்.
[7:21]
நிச்சயமாக
நான் உங்களிருவருக்கும்
நற்போதனை செய்பவனாக
இருக்கிறேன் என்று
சத்தியம் செய்து கூறினான்.
[7:22]
இவ்வாறு, அவன்
அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள்
(தங்கள் நிலையிலிருந்து)
கீழே இறங்கும்படிச்
செய்தான் - அவர்களிருவரும்
அம்மரத்தினை (அம்மரத்தின்
கனியை)ச் சுவைத்தபோது
- அவர்களுடைய வெட்கத்தலங்கள்
அவர்களுக்கு வெளியாயிற்று
அவர்கள் சுவனபதியின்
இலைகளால் தங்களை மூடிக்கொள்ள
முயன்றனர்; (அப்போது)
அவர்களை அவர்கள்
இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும்
அம்மரத்தை விட்டும்
நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான்
உங்களுக்கு பகிரங்கமான
பகைவன் என்று நான்
உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று
கேட்டான்.