[7:74]
இன்னும்
நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப்
பின் உங்களைப்
பூமியில் பின்
தோன்றல்களாக்கி
வைத்தான்; பூமியில்
உங்களை வசிக்கச்
செய்தான். அதன்
சமவெளிகளில் நீங்கள்
மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக்
குடைந்து வீடகளை
அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே
நீங்கள் அல்லாஹ்வின்
இந்த அருட்கொடைகளை
நினைவு கூறுங்கள்.
பூமியில் குழப்பம் செய்பவர்களாகக்
கெட்டு அலையாதீர்கள்" (என்றும
கூறினார்).
[7:75]
அவருடைய
சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்)
பெருமையடித்துக்
கொண்டிருந்த தலைவர்கள்
பலஹீனர்களாக கருதப்பட்ட
ஈமான் கொண்டவர்களை
நோக்கி; "நிச்சயமாக
ஸாலிஹ் அவருடைய
இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட
தூதரென நீங்கள்
உறுதியாக அறிவீர்களோ?" எனக்
கேட்டார்கள் - அதற்கு
அவர்கள், "நிச்சயமாக
நாங்கள் அவர் மூலம்
அனுப்பப்பட்ட
தூதை நம்புகிறோம்" என்று
(பதில்) கூறினார்கள்.
[7:76]
அதற்கு
பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள்
எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக
நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று
கூறினார்கள்.
[7:77]
பின்னர், அவர்கள்
அந்த ஒட்டகத்தை
அறுத்து தம் இறைவனின்
கட்டளையை மீறினர்; இன்னும்
அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே
நீர் (இறைவனின்)
தூதராக இருந்தால், நீர்
அச்சறுத்துவதை எம்மிடம்
கொண்டு வாரும்" என்று
கூறினார்கள்.
[7:78]
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு)
அவர்களை பூகம்பம்
பிடித்துக் கொண்டது
அதனால் அவர்கள் (காலையில்)
தம் வீடுகளிலேயே
இறந்தழிந்து கிடந்தனர்.
[7:79]
அப்பொழுது, (ஸாலிஹ்)
அவர்களை விட்டு
விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய
சமூகத்தாரே! மெய்யாகவே
நான் உங்களுக்கு
என் இறைவனுடைய
தூதை எடுத்துக்
கூறி, "உங்களுக்கு
நற்போதனையும் செய்தேன்; ஆனால்
நீங்கள் நற்போதனையாளர்களை
நேசிப்பவர்களாக
இல்லை" என்று கூறினார்.
[7:80]
மேலும்
லூத்தை (அவர் சமூகத்தாரிடையே
நபியாக அனுப்பினோம்;) அவர்
தம் சமூகத்தாரிடம்
கூறினார்; உலகத்தில்
எவருமே உங்களுக்கு
முன் செய்திராத
மானக்கேடான ஒரு
செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"
[7:81]
மெய்யாகவே
நீங்கள் பெண்களை விட்டு
விட்டு, ஆண்களிடம்
காம இச்சையைத்
தணித்துக் கொள்ள
வருகிறீர்கள்
- நீங்கள் வரம்பு
மீறும் சமூகத்தாராகவே
இருக்கின்றீர்கள்.