[7:82]
நிச்சயமாக
இவர்கள் தூய்மையான மனிதர்களாக
இருக்கிறார்கள்.
இவர்களை உங்கள்
ஊரைவிட்டும் வெளியேற்றி
விடுங்கள் என்று
அவர்கள் கூறியதைத்
தவிர (வேறெதுவும்)
அவரது சமுதாயத்தின்
பதிலாக இருக்கவில்லை.
[7:83]
எனவே, நாம்
அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர்
குடும்பத்தாரையும்
காப்பாற்றினோம்.
அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக
பின் தங்கி விட்டாள்.
[7:84]
இன்னும்
நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப்
பொழியச் செய்(து
அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின்
இறுதி முடிவு
என்ன ஆயிற்று என்று
(நபியே!) நீர் நோக்குவீராக.
[7:85]
மத்யன்
நகரவாசிகளிடம் அவர்களுடை
சகோதரராகிய ஷுஐபை
(நம் தூதராக அனுப்பிவைத்தோம்)
அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே!
அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி
உங்களுக்கு வேறு
நாயனில்லை நிச்சயமாக
உங்களுக்கு உங்கள்
இறைவனிடமிருந்து
ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது
அளவை முழுமையாக
அளந்து, எடையைச் சரியாக
நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு
அவர்களுக்கு உரிய
பொருட்களை (கொடுப்பதில்)
குறைத்து விடாதீர்கள்; பூமியில்
சீர் திருத்தம்
ஏற்பட்ட பின்னர், அதில்
குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள்
முஃமின்களாக இருந்தால், இதுவே
உங்களுக்கு நன்மையாக
இருக்கும்" என்று
கூறினார்.
[7:86]
மேலும், நீங்கள்
ஒவ்வொரு வழியிலும்
உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின்
மீது ஈமான் கொண்டவர்களை
பயமுறுத்தி, (அவர்களை)
அல்லாஹ்வின் பாதையை
விட்டுத்தடுத்து, அதில்
கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள்
சொற்பத் தொகையினராக
இருந்தீர்கள்; அவன்
உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும்
நினைவு கூறுங்கள்
- குழப்பம் செய்து
கொண்டிருந்தோரின்
முடிவு என்னுவாயிற்று
என்பதைக் கவனிப்பீர்களாக
(என்றும் கூறினார்).
[7:87]
உங்களில்
ஒரு பிரிவினர், எதனுடன்
நான் அனுப்பப்பட்டுள்ளேனோ
அதை நம்புகிறார்கள்; இன்னும்
மற்றோர் பிரிவினர்
(அதை) நம்பவில்லை
- அல்லாஹ் நம்மிடையே
தீர்ப்புக் கூறும்
வரை பொறுமையாக
இருங்கள் - அவனே
தீர்ப்பளிப்பவர்களில்
மிகவும் மேலானவன்
(என்றும் கூறினார்).