[7:96]
நிச்சயமாக
அவ்வூர்வாசிகள் ஈமான்
கொண்டு அல்லாஹ்வுக்கு
அஞ்சி நடந்திருந்தால், நாம்
அவர்களுக்கு வானத்திலிருந்தும்
பூமியிலிருந்தும்
- பரகத்துகளை - பாக்கியங்களைத்
திறந்து விட்டிருப்போம்; ஆனால்
அவர்கள் (நபிமார்களை
நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள்
செய்து கொண்டிருந்த
(பாவத்)தின் காரணமாக
நாம் அவர்களைப்
பிடித்தோம்.
[7:97]
அவ்வூர்வாசிகள்
இரவில் நித்திரை
செய்து கொண்டிருக்கும்
போதே, நமது வேதனை
அவர்களை வந்து
அடையாது என பயமில்லாமல்
இருக்கின்றார்களா?
[7:98]
அல்லது
அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது)
பகலில் விளையாடிக்கொண்டிருக்கும்
போதே, நமது வேதனை அவர்களையடையாது
என பயமில்லாமல்
இருக்கின்றார்களா?
[7:99]
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து
அவர்கள் அச்சம்
தீர்ந்து விட்டார்களா? நஷ்ட
வாளிகளான மக்களை தவிர, வேறு
எவரும் அல்லாஹ்வின்
சூழ்ச்சியிலிருந்து
அச்சம் தீர்ந்து
இருக்க மாட்டார்கள்.
[7:100]
பூமியில்
(வாழ்ந்து போனவர்களுக்குப்
பின்னால்), அதனை
வாரிசாகப் பெற்ற
இவர்களையும், நாம்
நாடினால், இவர்களுடைய
பாவங்களின் காரணத்தால்
(அவ்வாறே) தண்டிப்போம்
என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம்
இவர்களுடைய இதயங்களின்
மீது முத்திரையிட்டு
விட்டோம்; எனவே
இவர்கள் (நற்போதனைகளுக்குச்)
செவிசாய்க்க மாட்டார்கள்.
[7:101]
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை
நாம் உமக்குக்
கூறுகிறோம்; நிச்சயமாக
அவர்களின் தூதர்கள்
அவர்களிடம் தெளிவான
அத்தாட்சிகளைக்
கொண்டு வந்தார்கள், எனினும்
அவர்கள் முன்னால் பொய்யாக்கிக்
கொண்டிருந்த காரணத்தினால்
நம்பிக்கை கொள்பவர்களாக
இல்லை - இவ்வாறே அல்லாஹ்
காஃபிர்களின்
இதயங்கள் மீது
முத்திரையிட்டு
விடுகிறான்.
[7:102]
அவர்களில்
பெரும்பாலோருக்கு வாக்குறுதியை
(நிறைவேற்றும்
தன்மை இருப்பதாக)
நாம் காணவில்லை
- அன்றியும் அவர்களில்
பெரும்பாரோரைப்
பாவிகளாகவே கண்டோம்.
[7:103]
அவர்களுக்குப்
பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன்
ஃபிர்அவ்னிடத்திலும்
அவனுடைய தலைவர்களிடத்திலும்
நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது
அவர்கள் அவற்றை
(நிராகரித்து)
அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய
குழப்பக்காரர்களின்
முடிவு எப்படியிருந்தது
என்பதை கவனிப்பீராக!
[7:104]
ஃபிர்அவ்னே!
நிச்சயமாக நான் அகிலங்களின்
இறைவனால் அனுப்பப்பட்ட
தூதன் ஆவேன் என்று
மூஸா கூறினார்.