[7:138]
நாம்
இஸ்ராயீலின் சந்ததியினரைக்
கடலைக்கடந்து
(அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய
விக்கிரகங்களை ஆராதனை
செய்து கொண்டிருந்த
ஒரு கூட்டத்தார்
அருகே (அவர்கள்)
சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே!
அவர்களிடமிருக்கும்
கடவுள்களைப் போல்
நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை
ஆக்கித்தருவீர்களாக!" என்று
வேண்டினர்; "நிச்சயமாக
நீங்கள் ஓர் அறிவில்லாத
கூட்டத்தாராக
இருக்கின்றீர்கள்" என்று
மூஸா (அவர்களிடம்) கூறினார்.
[7:139]
நிச்சயமாக
இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும்
மார்க்கம் அழியக்
கூடியது இன்னும்
அவர்கள் செய்பவை
யாவும் (முற்றிலும்)
வீணானவையே (என்றும்
கூறினார்).
[7:140]
அன்றியும், அல்லாஹ்
அல்லாத ஒன்றையா
நான் உங்களுக்கு
இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ
உங்களை உலகத்திலுள்ள
எல்லா மக்களையும்விட
மேன்மையாக்கி
வைத்துள்ளான்
என்றும் அவர் கூறினார்.
[7:141]
இன்னும்
நினைவு கூறுங்கள்; ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரிடமிருந்து
நாம் உங்களைக்
காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக்
கொடிய வேதனைகளைக்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள்
உங்கள் ஆண் மக்களைக்
கொலை செய்துவிட்டு, (உங்களைச்
சிறுமைப்படுத்துவதற்காக)
உங்கள் பெண் மக்களை
உயிருடன் வாழவிட்டார்கள்; இதில்
உங்களுக்கு உஙகள்
இறைவனிடமிருந்து
ஒரு பெரும்
சோதனை ஏற்பட்டிருந்தது.
[7:142]
மூஸாவுக்கு
நாம் முப்பது இரவுகளை
வாக்களித்தோம்; பின்னர், மேலும்
அதை பத்து (இரவுகளைக்)
கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்hவறாக
அவருடைய இறைவன்
(வாக்களித்த) காலக்கெடு
நாற்பது இரவுகளாக
முழமை பெற்றது.
அப்போது மூஸா தம்
சதோதரர் ஹாரூனை
நோக்கி, "நீங்கள் என்னுடைய
சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக
இருந்து, (அவர்களைத்)
திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின்
வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்.
[7:143]
நாம்
குறித்த காலத்தில் (குறிப்பிட்ட
இடத்தில்) மூஸா
வந்த போது, அவருடைய
இறைவன் அவருடன்
பேசினான்; அப்போது
மூஸா "என் இறைவனே!
நான் உன்னைப் பார்க்க
வேண்டும்; எனக்கு
உன்னைக் காண்பிப்பாயாக!
என்று வேண்டினார்.
அதற்கு அவன், "மூஸாவே!
நீர் என்னை ஒருக்காலும்
பார்க்க முடியாது, எனினும்
நீர் இந்த மலையைப்
பார்த்துக் கொண்டிரும்.
அது தன் இடத்தில்
நிலைத்திருந்தால், அப்போது
நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று
கூறினான். ஆகவே
அவருடைய இறைவன்
அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத்
தோற்றுவித்த போது, அவன்
அம்மலையை நொறுக்கித்
தூளாக்கி விட்டான்; அப்போது
மூஸா மூர்ச்சையாகிக்
கீழே விழுந்து
விட்டார். அவர்
தெளிவடைந்ததும், "(இறைவா!)
நீ மிகவும் பரிசத்தமானவன்; நான்
உன்னிடம் மன்னிப்பு
கோருகிறேன். ஈமான்
கொண்டவர்களில்
நான் முதன்மையானவனாக
இருக்கிறேன்" என்று
கூறினார்.