[7:160]
ஸல்வாவையும்
(மேலான உணவாக) இறக்கிவைத்து "நாம்
உங்களுக்கு அளித்துள்ள
தூயவற்றிலிருந்து புசியுங்கள்" (என்று
சொன்னோம்; அவ்வாறு
இருந்தும் அவர்கள்
அல்லாஹ்வுக்கு மாறு
செய்தார்கள்), அவர்கள்
நமக்கு ஒன்றும்
தீங்கிழைக்கவிலலை
தங்களுக்குத்
தாமே தீங்கிழைத்துக்
கொண்டார்கள்.
[7:161]
இன்னும்
அவர்களை நோக்கி; "நீங்கள்
இவ்வூரில் வசித்திருங்கள், இதில்
நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம்
(நீங்கள் நாடிய
பொருட்களைப்) புசித்துக்
கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய
பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று
கூறியாவாறு (அதன்) வாயிலில்
(பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக
நுழையுங்கள்; நாம்
உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.
நன்மை செய்பவர்களுக்கு
நாம் அதிகமாகவே
(கூலி) கொடுப்போம்" என்று
கூறப்பட்டபோது
[7:162]
அவர்களில்
அநியாயம் செய்தவர்கள்
அவர்களுக்கு கூறப்பட்டதை
வெறொரு சொல்லாக
மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள்
அநியாயம் செய்ததின்
காரணமாக அவர்கள்
மீது நாம் வானத்திலிருந்து
வேதனையை இறக்கினோம்.
[7:163]
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர்
மக்களைப்பற்றி
நீர் அவர்களைக்
கேளும் - அவர்கள்
(தடுக்கப்பட்ட
ஸப்து) சனிக்கிழமையன்று
வரம்பை மீறி (மீன்
வேட்டையாடி)க்
கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய
சனிக்கிழமையன்று
(கடல்) மீன்கள், அவர்களுக்கு(த்
தண்ணீருக்கு மேலே தலைகளை
வெளியாக்கி)க்
கொண்டு வந்தன
- ஆனால் சனிக்கிழமையல்லாத
நாட்களில் அவர்களிடம்
(அவ்வாறு வெளியாக்கி)
வருவதில்லை - அவர்கள்
செய்து கொண்டிருந்த பாவத்தின்
காரணமாக அவர்களை
நாம் இவ்வாறு சோதனைக்
குள்ளாக்கினோம்.