[7:188]
(நபியே!) நீர்
கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி
நான் எனக்கே யாதொரு
நன்மையோ அல்லது
தீமையோ செய்து கொள்ள
சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை
நான் அறிபவனாக
இருந்தால் நம்மைகளை அதிகமாகத்
தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில்
எவ்விதமான) தீங்கும்
என்னைத் தீண்டியிராது
- நம்பிக்கை கொள்ளும்
மக்களுக்கு நான்
அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம்
கூறுபவனுமேயன்றி
வேறில்லை."
[7:189]
அவனே, உங்களை
ஒரே மனிதரிலிருந்து
படைத்தான், அவருடன்
கூடி (இணைந்து)
வாழ்வதற்காக அவருடைய
துணைவியை (அவரிலிருந்தே)
படைத்தான் - அவன்
அவளை நெருங்கிய
போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு
அதனைச் சுமந்து
நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு
அது பளுவாகவே, அவர்களிருவரும்
தம்மிருவரின்
இறைவனிடம், "(இறைவனே!)
எங்களுக்கு நீ நல்ல
(சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக
நாங்கள் இருவரும்
நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று
பிரார்த்தித்துக்
கொண்டிருந்தனர்.
[7:190]
அவர்களுக்கு
(அவர்கள் விருப்பப்படி)
நல்ல குழந்தையை
அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு
அவன் கொடுத்ததில் அவ்விருவரும்
அவனுக்கு இணைகளைக்
கற்பிக்கின்றனர்
- இவர்கள் இணை வைப்பதை
விட்டும் அல்லாஹ்
தூய்மையானவன்."
[7:191]
எந்தப்
பொருளையும் படைக்க இயலாதவற்றையா
இவர்கள் (அல்லாஹ்வுக்கு)
இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே)
படைக்கப்பட்டவர்களாயிற்றே!
[7:192]
அவர்கள்
இவர்களுக்கு எத்தகைய உதவியும்
செய்ய சக்தியற்றவர்களாக
இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல)
அவர்கள் தமக்குத்
தாமே உதவி செய்து
கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
[7:193]
(இந்த முஷ்ரிக்குகளை)
நீங்கள் நேர்வழிக்கு
அழைத்தாலும், உங்களை
அவர்கள் பின்பற்ற
மாட்டார்கள்; நீங்கள்
அவர்களை அழைப்பதும்
அல்லது (அழையாது)
வாய்மூடியிருப்பதும்
உங்களுக்குச்
சமமேயாகும்.
[7:194]
நிச்சயமாக
அல்லாஹ்வையன்றி எவர்களை
நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும்
உங்களைப் போன்ற
அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால் நீங்கள்
அவர்களை அழைத்துப்
பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு
பதில் அளிக்கட்டும்!
[7:195]
அவர்களுக்கு
நடக்கக்கூடிய கால்கள்
உண்டா? அல்லது அவர்களுக்கு
பிடிப்பதற்குரிய
கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப்
பார்க்கக் கூடிய
கண்கள் உண்டா? அல்லது
அவர்களுக்குக்
கேட்கக் கூடிய
காதுகள் உண்டா? (நபியே!) நீர்
கூறும்; "நீங்கள்
இணை வைத்து வணங்கும் (உங்கள்)
தெய்வங்களை (எல்லாம்)
அழைத்து, எனக்கு(த்
தீங்கு செய்திட)
சூழ்ச்சி செய்து
பாருங்கள் - (இதில்)
எனக்குச் சிறிதும்
அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.