[7:196]
நிச்சயமாக
என் பாதுகாவலன்
அல்லாஹ்வே. அவனே
வேதத்தை இறக்கி
வைத்தான். அவனே
நல்லடியார்களைப்
பாதுகாப்பவன்
ஆவான்.
[7:197]
அவனையன்றி
நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ
அவர்கள் உங்களுக்கு
உதவி செய்யவும்
தங்களுக்குத்
தாங்களே உதவி செய்து
கொள்ளவும் சக்தி
பெற மாட்டார்கள்.
[7:198]
நீங்கள்
அவர்களை நேர் வழியின்
பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள்.
(நபியே!) அவர்கள்
உம்மைப் பார்ப்பது
போல் உமக்குத்
தோன்றும்; ஆனால்
அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
[7:199]
எனினும்
(நபியே) மன்னிப்பைக்
கைக் கொள்வீராக!
நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை)
ஏவுவீராக மேலும்
அறிவீனர்களைப்
புறக்கணித்து
விடும்.
[7:200]
ஷைத்தான்
ஏதாவதொரு (தவறான)
எண்ணத்தை உம் மனத்தில்
ஊசலாடச் செய்து
(தவறு செய்ய உம்மைத்)
தூண்டினால், அப்போது
அல்லாஹ்விடம்
பாதுகாப்புத்
தேடுவீராக! மெய்யாகவே அவன்
செவியேற்பவனாகவும், (யாவற்றையும்
நன்கு) அறிபவனாகவும்
இருக்கின்றான்.
[7:201]
நிச்சயமாக
எவர்கள் (அல்லாஹ்வுக்கு)
அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து
தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள்
(அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள்
- அவர்கள் திடீரென
விழிப்படைந்து
(ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
[7:202]
ஆனால்
ஷைத்தான்களின்
சதோதரர்களோ அவர்களை
வழி கேட்டிலேயே
இழுத்துச் செல்வார்கள் - அவர்கள்
(பாவத்தின் பாதையிலான
தம் முயற்சியில்)
யாதொரு குறையும்
செய்ய மாட்டார்கள்.
[7:203]
நீர்
(அவர்களின் விருப்பப்படி)
அவர்களிடம் ஓர்
அத்தாட்சியைக்
கொண்டு வராவிட்டால், நீர்
இந்த அத்தாட்சியை
ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர்
கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம்
என் இறைவனிடமிருந்து எனக்கு
அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன்
ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து
வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது
- நம்பிக்கை கொண்ட
மக்களுக்கு.
[7:204]
குர்ஆன்
ஓதப்படும்போது
அதனை நீங்கள்
செவிதாழ்த்தி
(கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது
நிசப்தமாக இருங்கள்
- (இதனால்)
நீங்கள் கிருபை
செய்யப்படுவீர்கள்.
[7:205]
(நபியே!) நீர்
உம் மனதிற்குள் மிக்க
பணிவோடும், அச்சத்தோடும்
(மெதுவாக) உரத்த
சப்தமின்றி காலையிலும், மாலையிலும்
உம் இறைவனின்
(திருநாமத்தை)
திக்ரு செய்து
கொண்டு இருப்பீராக!
(அவனை) மறந்து
விட்டிருப்போரில்
ஒருவராக நீர் இருக்க
வேண்டாம்.
[7:206]
எவர்கள்
உமது இறைவனிடத்தில் (நெருங்கி)
இருக்கிறார்களேர்
அவர்கள் நிச்சயமாக
பெருமை கொண்டு
அவனை வணங்காமல் இருப்பதில்லை.
மேலும் அவனுடைய
(புகழைக் கூறித்)
துதித்துக்கொண்டும், அவனுக்குச் சிரவணக்கம்
(ஸஜ்தா) செய்து
கொண்டும் இருக்கின்றனர்.