[9:21]
அவர்களுக்கு
அவர்களுடைய இறைவன் தன்னுடைய
கிருபையையும், திருப்பொருத்தத்தையும்
(அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக)
நன்மாராயம் கூறுகிறான்; அங்கு
அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
[9:22]
அவற்றில்
அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக
அல்லாஹ்விடத்தில்
(அவர்களுக்கு)
மகத்தான (நற்) கூலி உண்டு.
[9:23]
ஈமான்
கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும்
உங்கள் சகோதரர்களும், ஈமானை
விட்டு குஃப்ரை
நேசிப்பார்களானால், அவர்களை
நீங்கள் பாதுகாப்பளர்களாக
எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களில் யாரேனும் அவர்களை
பாதுகாப்பாளர்களாக
எடுத்துக் கொண்டால், அவர்கள்
தான் அநியாயக்காரர்கள்
ஆவார்கள்.
[9:24]
(நபியே!) நீர்
கூறும்; உங்களுடைய
தந்தைமார்களும், உங்களுடைய
பிள்ளைகளும், உங்களுடைய
சகோதரர்களும், உங்களுடைய
மனைவிமார்களும், உங்களுடைய
குடும்பத்தார்களும், நீங்கள்
திரட்டிய செல்வங்களும், நஷ்டம்
(எங்கே) ஏற்பட்டு
விடுமோ என்று நீங்கள்
அஞ்சுகின்ற (உங்கள்)
வியாபாரமும், நீங்கள்
விருப்பத்துடன்
வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும்
அவன் தூதரையும், அவனுடைய
வழியில் அறப்போர்
புரிவதையும் விட உங்களுக்கு
பிரியமானவையாக
இருக்குமானால், அல்லாஹ்
அவனுடைய கட்டளையை
(வேதனையை)க் கொண்டுவருவதை
எதிர்பார்த்து
இருங்கள் - அல்லாஹ்
பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
[9:25]
நிச்சயமாக
அல்லாஹ் உங்களுக்குப்
பல போர்க்களங்களில்
உதவி செய்திருக்கின்றான்; (நினைவு
கூறுங்கள்;) ஆனால்
ஹுனைன் (போர் நடந்த)
அன்று. உங்களைப்
பெருமகிழ்ச்சி
கொள்ளச் செய்த உங்களுடைய
அதிகமான (மக்கள்)
தொகை உங்களுக்கு
எவ்விதப் பலனும்
அளிக்கவில்லை, (மிகவும்)
பரந்த பூமி உங்களுக்கு
(அப்போது) சுருக்கமாகிவிட்டது.
அன்றியும் நீங்கள்
புறங்காட்டிப்
பின்வாங்கலானீர்கள்.
[9:26]
பின்னர்
அல்லாஹ் தன்னுடைய தூதர்
மீதும், முஃமின்கள்
மீதும் தன்னுடைய
சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க
முடியாப் படைகளையும்
இறக்கி வைத்தான்.
(அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்
குள்ளாக்கினான்
- இன்னும் இதுவே
நிராகரிப்போரின்
கூலியாகும்.