[9:55]
அவர்களுடைய
செல்வங்களும், அவர்களுடைய
மக்கள் (பெருக்கமும்)
உம்மை ஆச்சரியப்படுத்த
வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக்
கொண்டு இவ்வுலக
வாழ்க்கையிலேயே
அவர்களை வேதனை
செய்யவும், அவர்கள் காஃபிர்களாக
இருக்கிற நிலையில்
அவர்களுடைய உயிர்கள்
பிரிவதையும் நாடுகிறான்.
[9:56]
நிச்சயமாகத்
தாங்களும் உங்களைச்
சார்ந்தவர்களே
என்று அல்லாஹ்வின்மீது
சத்தியம் செய்து
சொல்கின்றனர்; அவர்கள்
உங்களைச் சார்ந்தவர்கள்
அல்லர்; என்றாலும்
அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
[9:57]
ஓர்
ஒதுங்கும் இடத்தையோ, அல்லது
குகைகளையோ, அல்லது
ஒரு சுரங்கத்தையோ
அவர்கள் காண்பார்களாயின்
(உம்மை விட்டு)
அதன் பக்கம் விரைந்து
ஓடிவிடுவார்கள்.
[9:58]
(நபியே!) தானங்கள்
விஷயத்தில் (பாரபட்சம்
உடையவர்) என்று
உம்மைக் குறை கூறுபவரும்
அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால்
அவற்றிலிருந்து
அவர்களுக்கும்
ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள்
- அப்படி அவற்றிலிருந்து
கொடுக்கப்படவில்லையானால், அவர்கள்
ஆத்திரம் கொள்கிறார்கள்.
[9:59]
அல்லாஹ்வும்
அவனுடைய தூரும் அவர்களுக்குக்
கொடுத்ததைக் கொண்டு
திருப்தியடைந்து, "அல்லாஹ்
நமக்குப் போதுமானவன்!
அல்லாஹ்வும், அவனுடைய
தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து
நமக்கு மேலும்
அளிப்பார்கள்; நிச்சயமாக
நாம் அல்லாஹ்வையே
விரும்பக்கூடியவர்கள்" என்று
கூறியிருப்பார்களானால்
(அது அவர்களுக்கு
நன்மையாக இருக்கும்).
[9:60]
(ஜகாத்
என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை
வசூல் செய்யும்
ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்
பால் அவர்கள் உள்ளங்கள்
ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை
விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின்
பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே
உரியவை. (இது) அல்லாஹ்
விதித்த கடமையாகும்
- அல்லாஹ் (யாவும்)
அறிபவன், மிக்க
ஞானமுடையோன்.
[9:61]
(இந்த நபியிடம்
யார் எதைச் சொன்னாலும்)
அவர் கேட்டுக்
கொள்பவராகவே இருக்கிறார்
எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும்
அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!)
நீர் கூறும்; "(நபி அவ்வாறு)
செவியேற்பது உங்களுக்கே
நன்மையாகும். அவர்
அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும்
நம்புகிறார்; அன்றியும்
உங்களில் ஈமான்
கொண்டவர்கள் மீது அவர்
கருணையுடையோராகவும்
இருக்கின்றார்." எனவே எவர்கள்
அல்லாஹ்வின் தூதரை
துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு
நோவினை தரும் வேதனையுண்டு.