[9:62]
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக
உங்களிடத்தில்
அவர்கள் அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள்
(உண்மையாகவே) முஃமின்களாக
இருந்தால், அவர்கள்
திருப்திப் படுத்த
மிகவும் தகுதியுடையவர்கள்
அல்லாஹ்வும், அவனுடைய
ரஸூலும் தான்.
[9:63]
எவர்
அல்லாஹ்வுக்கும்
அவனது ரஸூலுக்கும்
விரோதம் செய்கின்றாரோ
நிச்சயமாக அவருக்குத்தான்
நரக நெருப்பு இருக்கிறது
என்பதை அவர் அறிந்து
கொள்ளவிலலையா? அவர்
அதில் என்றென்றும் தங்கியிருப்பார்
- இது பெரும் இழிவாகும்.
[9:64]
முனாஃபிக்குகள்
(நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில்
மறைத்து வைத்திருப்பவற்றை
அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய
ஓர் அத்தியாயம்
இறக்கி வைக்கப்படுமோ
என அஞ்சுகிறார்கள்
- (நபியே!) நீர் கூறும்; " நீங்கள்
பரிகாசம் செய்து
கொண்டே இருங்கள்.
நீங்கள் அஞ்சிக்
கொண்டிருப்பதை நிச்சயமாக
அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே
இருக்கின்றான்."
[9:65]
(இதைப்பற்றி)
நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள்
வெறுமனே விவாதித்துக்
கொண்டும், விளையாடிக்கொண்டும்தான்
இருந்தோம்" என்று
நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும்,
அவன்
வசனங்களையும்,
அவன்
தூதரையுமா நீங்கள்
பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?"
என்று
(நபியே!)
நீர் கேட்பீராக.
[9:66]
புகழ்
கூற வேண்டாம், நீங்கள் ஈமான்
கொண்டபின் நிச்சயமாக
நிராகரிப்போராய்
விட்டீர்கள், நாம்
உங்களில் ஒரு கூட்டத்தாரை
மன்னித்தபோதிலும், மற்றொரு
கூட்டத்தாரை அவர்கள்
குற்றவாளிகளாகவே இருப்பதால்
நாம் வேதனை செய்வோம்.
[9:67]
நயவஞ்சகர்களான
ஆடவரும், நயவஞ்சகர்களான
பெண்டிரும் அவர்களில்
சிலர் சிலரைச்
சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை
தூண்டி, நன்மைகளை விட்டும்
தடுப்பார்கள்.
(அல்லாஹ்வின் பாதையில்
செலவு செய்யாமல்)
தம் கைகளை மூடிக்
கொள்வார்கள்; அவர்கள்
அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே
அவன் அவர்களை மறந்து
விட்டான் - நிச்சயமாக
நயவஞ்சகர்கள் பாவிகளே
ஆவார்கள்.
[9:68]
நயவஞ்சர்களான
ஆடவருக்கும், நயவஞ்சகர்களான
பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும்
அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில்
அவர்கள் நிலையாகத்
தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப்
போதுமானதாகும்; இன்னும்
அல்லாஹ் அவர்களைச்
சபித்துள்ளான்
- அவர்களுக்கு
நிரந்தராமான வேதனையுமுண்டு.