[9:107]
இன்னும்
(இஸ்லாம் மார்க்கத்திற்குத்)
தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு
(நிராகரிப்புக்கு)
உதவி செய்யவும், முஃமின்களிடையே
பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும்
விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு
புகலிடமாகவும்
ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர்
நிறுவியவர்கள்; "நாங்கள்
நல்லதையே யன்றி
(வேறொன்றும்) விரும்பவில்லை" என்று
நிச்சயமாகச் சத்தியம்
செய்வார்கள் -
ஆனால் அவர்கள் நிச்சயமாகப்
பொய்யர்கள் என்பதற்கு
அல்லாஹ்வே சாட்சியம்
கூறுகிறான்.
[9:108]
ஆகவே, (நபியே!)
அங்கு நீர் தொழுகைக்காக
ஒருக்காலும் நிற்க
வேண்டாம் - நிச்சயமாக
ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின்
மீது அடிகோலப்பட்ட
மஸ்ஜிது உள்ளது
அதில் நீர் நின்று
(தொழவும், தொழ வைக்கவும்)
மிகவும் தகுதியானது
ஆங்கிருக்கும்
மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே
விரும்புகிறார்கள்.
அல்லாஹ் தூய்மையுடையோரையே
விரும்புகிறான்.
[9:109]
யார்
மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை
நாடி ஒரு கட்டடத்தின்
அடிப்படையை அமைத்தவரா? அல்லது
(தானே சரிந்துவிடக்கூடிய)
பூமியை ஒட்டி அடிப்படையிட்டு
(அந்த அடிப்படையில்)
கட்டடத்தை - அதுவும்
சரிந்து பொடிப்பொடியாக
நொறுங்கி அவருடன்
நரக நெருப்பில்
விழுந்து விடும்
(கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ்
அநியாயக்கார மக்களை நேர்
வழியில் நடத்த
மாட்டான்.
[9:110]
அவர்கள்
எழுப்பிய அவர்களுடைய கட்டடம்
(இடிக்கப்பட்டது); அவர்கள்
உள்ளங்களிலே ஒருவடுவாக
இருந்துக் கொண்டே இருக்கும்.
அவர்களின் உள்ளங்கள்
துண்டு துண்டாக
ஆகும்வரை (அதாவது
மரணிக்கும் வரை) . அல்லாஹ்
நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
[9:111]
(நிச்சயமாக
அல்லாஹ் முஃமின்களின்
உயிர்களையும், பொருள்களையும்
நிச்சயமாக அவர்களுக்கு
சுவனம் இருக்கிறது
என்ற (அடிப்படையில்)
விலைக்கு வாங்கிக்
கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின்
பாதையில் போரிடுவார்கள்
- அப்போது அவர்கள்
(எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்)
வெட்டவும் படுகிறார்கள்.
தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும்
இதைத் திட்டமாக்கிய
நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை
விட வாக்குறுதியைப்
பூரணமாக நிறைவேற்றுபவர்
யார்? ஆகவே, நீங்கள் அவனுடன்
செய்து கொண்ட இவ்வாணிபத்தைப்
பற்றி மகிழ்ச்சி
அடையுங்கள் - இதுவே
மகத்தான வெற்றியாகும்.