[9:112]
மன்னிப்புக்கோரி
மீண்டவர்கள், (அவனை)
வணங்குபவர்கள், (அவனைப்)
புகழ்பவர்கள், நோன்பு
நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது
செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை
செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள்.
அல்லாஹ்வின் வரம்புகளைப்
பேணிப் பாதுகாப்பவர்கள்
- இத்தகைய (உண்மை)
முஃமின்களுக்கு
(நபியே!) நீர் நன்மாராயம்
கூறுவீராக!
[9:113]
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்)
தம் நெருங்கிய
உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக
அவர்கள் நரகவாதிகள்
என்று தெளிவாக்கப்பட்ட
பின் அவர்களுக்காக
மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான்
கொண்டவர்களுக்கும்
தகுதியானதல்ல.
[9:114]
இப்றாஹீம்
(நபி) தம் தந்தைக்காக
மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர்
தம் தந்தைக்குச்
செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி
வேறிலலை மெய்யாகவே, அவர்
(தந்தை) அல்லாஹ்வுக்கு
விரோதி என்பது
தெளிவாகியதும்
அதிலிருந்து அவர்
விலகிக் கொண்டார்
- நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும்
இரக்கமுள்ளவராகவும்
இருந்தார்.
[9:115]
எந்தவொரு
சமுதாயத்திற்கும் அல்லாஹ்
நேர்வழி காட்டிய
பின் அவர்கள் தவிர்ந்து
கொள்ள வேண்டியவைகளை
அவர்களுக்கு தெளிவுபடுத்தும்
வரை அவர்களை அவன்
வழி கெடுப்பவனாக
இல்லை. நிச்சயமாக
அல்லாஹ் எல்லாப்
பொருள்களையும்
அறிந்தவன்.
[9:116]
வானங்கள், பூமி
ஆகியவற்றின் ஆட்சி
நிச்சயமாக அல்லாஹ்வுக்கே
உரியது (அவனே) உயிர்
கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும்
செய்கிறான் - அல்லாஹ்வைத்
தவிர உங்களுக்கு
வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும்
இல்லை.
[9:117]
நிச்சயமாக
அல்லாஹ் நபியையும் கஷ்ட
காலத்தில் அவரைப்
பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும்
மன்னித்தான் அவர்களில்
ஒரு பிரிவினருடைய
நெஞ்சங்கள் தடுமாறத்
துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து
அருள் புரிந்)தான்
- நிச்சயமாக அவன்
அவர்கள் மீது மிக்க
கருணையும், கிருபையும் உடையவனாக
இருக்கின்றான்.