[2:135]
நீங்கள்
யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக
மாறிவிடுங்கள்
- நீங்கள் நேர்வழியை
அடைவீர்கள் என்று
அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான
வழியைச் சார்ந்த)
இப்ராஹீமின் மார்க்கத்தையே
பின்பற்றுவோம், (இணை வைக்கும்)
முஷ்ரிக்குகளில்
நின்றும் அவரில்லை" என்று
(நபியே!) நீர் கூறுவீராக!
[2:136]
(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு
இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப்
இன்னும் அவர் சந்ததியினருக்கு
இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும்
கொடுக்கப்பட்டதையும்
இன்னும் மற்ற நபிமார்களுக்கும்
அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும்
நம்புகிறோம், அவர்களில்
நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள்
வேறுபாடு காட்ட
மாட்டோம்; இன்னும்
நாங்கள் அவனுக்கே
முற்றிலும் வழிபடுகிறோம்" என்று
கூறுவீர்களாக.
[2:137]
ஆகவே, நீங்கள்
ஈமான் கொள்வதைப்போல்
அவர்களும் ஈமான்
கொண்டால் நிச்சயமாக
அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால்
அவர்கள் புறக்கணித்துவிட்டால்
நிச்சயமாக அவர்கள் பிளவில்தான்
இருக்கின்றனர்.
எனவே அவர்களி(ன்
கெடுதல்களி)லிருந்து
உம்மைக் காப்பாற்ற
அல்லாஹ்வே போதுமானவன்;. அவன்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும், (எல்லாம்)
அறிந்தோனுமாகவும்
இருக்கிறான்.
[2:138]
(இதுவே)
அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்)
ஆகும்;, வர்ணம் கொடுப்பதில்
அல்லாஹ்வைவிட
அழகானவன் யார்? அவனையே
நாங்கள் வணங்குகிறோம்
(எனக் கூறுவீர்களாக).
[2:139]
அல்லாஹ்வைப்
பற்றி நீங்கள் எங்களிடம்
தர்க்கிக்கிறீர்களா? அவனே
எங்கள் இறைவனும், உங்கள்
இறைவனும் ஆவான்;, எங்கள்
செய்கைகளின் (பலன்)
எங்களுக்கு, உங்கள்
செய்கைகளின் (பலன்)
உங்களுக்கு, மேலும்
நாங்கள் அவனுக்கே
கலப்பற்ற (ஈமான்
உடைய)வர்களாக இருக்கின்றோம்" என்று (நபியே!
அவர்களுக்கு) நீர்
கூறுவீராக.
[2:140]
இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும்
அவர்களுடைய சந்ததியினர்
யாவரும் நீச்சயமாக யூதர்கள்
அல்லது கிறிஸ்தவர்களே
என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர்
கேட்பீராக "(இதைப்
பற்றி) உங்களுக்கு
நன்றாகத் தெரியுமா
அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து
தன்பால் வந்திருக்கும்
சாட்சியங்களை
மறைப்பவனைவிட அநியாயக்காரன்
யார்? இன்னும் அல்லாஹ்
நீங்கள் செய்பவை
பற்றி பராமுகமாக இல்லை."
[2:141]
அந்த
உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது.
அவர்கள் சம்பாதித்தவை
அவர்களுக்கே, நீங்கள்
சம்பாதித்தவை உங்களுக்கே!
அவர்கள் செய்து
கொண்டிருந்தது
பற்றி நீங்கள்
கேட்கப்பட மாட்டீர்கள்.