[10:43]
உம்மைப்
பார்ப்போரும் அவர்களில்
இருக்கிறார்கள்
- (எதுவும்) பார்க்க
இயலாத குருடர்களை
நீர் நேர்வழியில்
செலுத்த முடியுமா?
[10:44]
நிச்சயமாக
அல்லாஹ் மனிதர்களுக்கு
எவ்வித அநியாயமும்
செய்வதில்லை -
எனினும் மனிதர்கள்
தமக்குத் தாமே அநியாயம்
செய்து கொள்கிறார்கள்.
[10:45]
அவன்
அவர்களை ஒன்று
சேர்க்கும் நாளில், தாங்கள்
(ஒரு) பகலில் சொற்ப
காலமே இவ்வுலகில்
தங்கியிருந்ததாக
(அவர்கள் எண்ணுவார்கள்; அப்போது)
தம்மில் ஒருவரை
ஒருவர் அறிந்து
கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப்
பொய்ப்படுத்தியவர்கள்
நிச்சயமாக நஷ்டம்
அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள்
நேர்வழி பெற்றிருக்கவில்லை.
[10:46]
(உம் வாழ்நாளிலேயே)
நாம் அவர்களுக்கு
வாக்களித்த (வேதனைகளில்)
ஒரு பகுதி (சம்பவிப்பதை)
நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது
(அதற்கு மன்னமேயே)
நாம் உம் ஆத்மாவை
கைப்பற்றிக் கொண்டாலும்
- (எப்படியிருப்பினும்)
அவர்கள் நம்மிடமே
திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள்
செய்வதற்கெல்லாம்
அல்லாஹ் சாட்சியாக
இருக்கின்றான்.
[10:47]
ஒவ்வொரு
சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய
இறை) தூதர் உண்டு; அவர்களுடைய
தூதர் (அவர்களிடம்)
வரும்போது அவர்களுக்கிடையில்
நியாயத்துடனேயே
தீர்ப்பளிக்கப்படும்
- அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம்
செய்யப்படமாட்டார்கள்.
[10:48]
நீங்கள்
உண்மையாளராக இருந்தால் (அச்ச
மூட்டப்படும்
வேதனை பற்றிய)
இந்த வாக்குறுதி
எப்போது (அமலுக்கு
வரும்) என்று
அவர்கள் கேட்கிறார்கள்.
[10:49]
(நபியே!) நீர்
கூறும்; "அல்லாஹ் நாடியதைத்
தவிர எனக்கு எவ்விதத்
தீமையோ, நன்மையே, எனக்கே
செய்து கொள்ள, நான் எவ்வித
அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு
சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட
காலத்)தவணையுண்டு; அவர்களது
தவணை வந்து விட்டால்
ஒரு நாழிகை பிந்தவும்
மாட்டார்கள் முந்தவும்
மாட்டார்கள்."
[10:50]
(நபியே!) நீர்
கூறுவீராக் "அவனுடைய
வேதனை உங்களுக்கு
இரவிலோ பகலிலோ
வந்துவிடுமானால்
- (அதைத் தடுத்துவிட
முடியுமா? என்பதை)
கவனித்தீர்களா? குற்றவாளிகள்
எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
[10:51]
அது
வந்ததன் பின்னரா
அதை நீங்கள்
நம்புவீர்கள்? (அவ்வேதனை
வந்ததும்) இதோ!
நீங்கள் எது (வர
வேண்டும் என்று அவசரப்பட்டுக்
கொண்டிருந்தீர்களோ
அது வந்து விட்டது
(என்று தான் கூறப்படும்).
[10:52]
அன்றியும், அந்த அநியாயக்காரர்களை
நோக்கி; "என்றென்றும்
நிலைத்திருக்கக்
கூடிய இவ்வேதனையைச் சவைத்துக்
கொண்டிருங்கள்
- நீங்கள் சம்பாதித்ததைத்
தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?" என்று
கூறப்படும்.
[10:53]
மேலும் "அது உண்மை தானா?" என்று
(நபியே! அவர்கள்)
உம்மிடம் வினவுகிறார்கள்; "ஆம்! என் இறைவன்
மீது சத்தியமாய்
நிச்சயமாக அது
உண்மையே. (அதை) நீங்கள்
தடுத்துவிட முடியாது" என்று
கூறுவீராக.