[10:98]
தங்களுடைய
ஈமான் பலனளிக்கு மாறு
(நம்பிக்கை கொண்டு
வேதனையிலிருந்து
தப்பித்துக் கொண்ட)
யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர்
ஊரார் ஏன் ஈமான்
கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய
சமூகத்தார்) ஈமான்
கொண்டதும் இம்மையில்
இழிவுபடுத்தும்
வேதனையை அவர்களை
விட்டும் நாம்
அகற்றினோம்; அன்றி, சிறிது
காலம் சகம் அனுபவிக்கும் படியும்
வைத்தோம்.
[10:99]
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள
யாவருமே ஈமான்
கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும்
முஃமின்களாக (நம்பிக்கை
கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று
அவர்களை நீர் கட்டாயப்படுத்த
முடியுமா?
[10:100]
எந்த
ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின்
கட்டளையின்றி
ஈமான் கொள்ள முடியாது
- மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது
வேதனையை அல்லாஹ்
ஏற்படுத்துகிறான்.
[10:101]
வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக்
கவனித்துப் பாருங்கள்
என்று (நபியே!) அவர்களிடம்
கூறுவீராக் எனினும்
ஈமான் கொள்ளாத
மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்
மாட்டா.
[10:102]
தங்களுக்குமுன்
சென்று விட்டார்களே
அவர்களுக்கு ஏற்பட்ட
நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள்
(வேறு எதனiயும்)
எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால்
அந்த கஷ்டகாலத்தை)
நீங்களும் எதிர்பார்திருங்கள்
- நிச்சயமாக நானும்
உங்களுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்"
என்று
(நபியே!) நீர் கூறுவீராக.
[10:103]
(அவ்வாறு
வேதனை வருங்காலத்தில்)
நம் தூதர்களையும், ஈமான்
கொண்டவாகளையும்
நாம் இவ்வாறே காப்பாற்றுவோம்
- (ஏனெனில்) ஈமான்
கொண்டவர்களைக்
காப்பாற்றுவது
நமது கடமையாகும்,
[10:104]
மனிதர்களே!
நீங்கள் என் மார்க்கத்தில்
சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி
நீங்கள் வணங்குபவர்களை நான்
வணங்கமாட்டேன்; ஆனால்
உங்களை மரிக்கச்
செய்யும் அல்லாஹ்வையே
நான் வணங்குகிறேன், நான்
முஃமின்களில்
ஒருவனாக இருக்குமாறு
ஏவப்பட்டுள்ளேம்
என்று (நபியே!) நீர்
கூறுவீராக.
[10:105]
நேர்மையான
மார்க்கத்தின்பாலே உம் முகத்தை
நிலைபெறச் செய்ய
வேண்டும்; முஷ்ரிக்குகளில்
ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
[10:106]
உமக்கு
(எவ்வித) நன்மையையோ, தீமையையோ
செய்ய இயலாத அல்லாஹ்
அல்லாததை எதனையும்
நீர் பிரார்த்திக்க
வேண்டாம்; (அவ்வாறு)
செய்வீராயின்
நிச்சயமாக நீர்
அநியாயக்காரர்களில்
ஒருவராகிவிடவீர்.