[10:107]
அல்லாஹ்
ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி
செய்தால் அதை அவனைத்
தவிர (வேறு எவரும்)
நீக்க முடியாது; அவன் உமக்கு
ஒரு நன்மை செய்ய
நாடிவிட்டால்
அவனது அருளைத்
தடுப்பவர் எவருமில்லை
தன் அடியார்களில்
அவன் நாடியவருக்கே
அதனை அளிக்கின்றான்
- அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க
கருணையுடையவனாகவும்
உள்ளான்.
[10:108]
(நபியே!) நீர்
கூறுவீராக் "மனிதர்களே!
நிச்சயமாக உங்கள்
இறைவனிடமிருந்து
உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார்
(அதைப் பின்பற்றி)
நேரான வழியில்
செல்கிறாரோ அவர்
தம் நன்மைக்காகவே
அந்நேர்வழியில்
செல்கின்றார்; எவர்
(அதை ஏற்க மறுத்து)
வழி தவறினாரோ, நிச்சயமாக
அவர்க தமக்குக்
கேடான வழியிலே
செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி)
உங்கள் காரியங்களை
நிர்வகிக்க அதிகாரம்
பெற்றவனல்லன்."
[10:109]
(நபியே!) உங்களுக்கு
வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே
பின்பற்றி நடந்து
கொள்வீராக் அல்லாஹ்
தீர்ப்பளிக்கும் வரையில்
பொறுமையாகவும், உறுதியாகவும்
இருப்பீராக! அவனே
தீர்ப்பளிப்பவர்களில் மிகவும்
மேலானவன்.
Hûd
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[11:1]
அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன்
வசனங்கள் (பல்வேறு
அத்தாட்சிகளால்)
உறுதியாக்கப்பட்டு
பின்னர் தெளிவாக
விவரிக்கப்பட்டுள்ளன-
மேலும், (இவை யாவற்றையும்)
நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம்
இருந்து(வந்து)ள்ளன.
[11:2]
நீங்கள்
அல்லாஹ்வையன்றி
(வேறு எதனையும்)
வணங்காதீர்கள். "நிச்சயமாக
நான் உங்களுக்கு
அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும்,
நன்மாராயம்
கூறுபவனாகவும்,
நான்
அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு)
இருக்கிறேன்"
(என்றும்).
[11:3]
நீங்கள்
உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத்
தேடி (பாவங்களை
விட்டு) அவனிடம்
திரும்புங்கள்; (நீங்கள்
அவ்வாறு செய்தால்)
அவன் ஒரு குறித்த
தவணைவரை உங்களுக்கு
வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய
ஒவ்வொருவருக்கும்
(மறுமையில்) தன்
அருளை (அதிகமாகவே)
கொடுப்பான்;. ஆனால்
நீங்கள் (ஈமான்
கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும்
நாளின் வேதனை குறித்து
நிச்சயமாக உங்களுக்காக
நான் பயப்பகிறேன் (என்றும்).
[11:4]
அல்லாஹ்விடமே
நீங்கள் மீண்டு வரவேண்டியுள்ளது; அவன்
எல்லாப்பொருட்களின்
மீதும் பேராற்றலுடையவன்
(என்றும் நபியே!
நீர் கூறுவீராக).
[11:5]
அவர்கள்
தங்களை (அல்லாஹ்விடமிருந்து
) மறைத்துக் கொள்வதற்காககத்
தங்கள் இருதயங்களை
(மறைத்து) மூடுகிறார்கள்!
அவர்கள் தம் ஆடைகளால்
(தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து
வைப்பதையும், வெளிப்படையாகக்
காட்டுவதையும்
அவன் அறிகிறான்
- ஏனெனில் நிச்சயமாக
அவன் இதயங்களின்
(இரகசியங்கள்)
யாவற்றையும் நன்கறிபவனாக
இருக்கின்றான் (என்பதை
அறிந்து கொள்வீர்களாக)!