[11:6]
இன்னும், உணவளிக்க
அல்லாஹ் பொறுப்பேற்றுக்
கொள்ளாத எந்த உயிரினமும்
பூமியில் இல்லை; மேலும்
அவை வாழும் இடத்தையும்
(இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து)
அடங்கும் இடத்தையும்
அவன் அறிகிறான்.
இவையனைத்தும்
(லவ்ஹுல் மஹ்ஃபூல்
என்னும்) தெளிவான
புத்தகத்தில் (பதிவாகி)
இருக்கின்றன.
[11:7]
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும்
ஆறு நாட்களில்
படைத்தான். அவனுடைய
அர்ஷு நீரின் மேல் இருந்தது.
உங்களில் யார்
அமலில் (செய்கையில்)
மேலானவர் என்பதைச்
சோதிக்கும் பொருட்டு
(இவற்றைப் படைத்தான்; இன்னும்
நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள்
மரணத்திற்குப்
பின் எழுப்பப்படுவீர்கள்" என்று
நீர் கூறினால், (அதற்கு
அவர்களிலுள்ள
நிராகரிப்பவர்கள்)
காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத்
தவிர வேறில்லை" என்று
நிச்சயமாகக் கூறுவார்கள்.
[11:8]
(குஃப்ரின்
காரணமாக அவர்களுக்கு
விதிக்கப்பட வேண்டிய)
வேதனையை ஒரு குறித்தகாலம்
வரை நாம் பிற்படுத்தினால் "அதைத்
தடுத்தது யாது?" என்று
அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்)
கேட்பார்கள். அவர்களுக்கு
வேதனை வரும் நாளில்
அவர்களை விட்டும்
(அது) தடுக்கப்படாது
என்பதையும், எதை அவர்கள்
பரிகாசம் செய்து
கொண்டிருந்தார்களோ
அது அவர்களைச்
சூழ்ந்து கொள்ளும்
என்பதையும் அவர்கள்
அறிந்து கொள்ள
வேண்டாமா?
[11:9]
நாம்
நம்மிடமிருந்து நற்கிருபையை
மனிதன் சுவைக்கும்படிச்
செய்து, பின்பு அதனை
அவனை விட்டும்
நாம் நீக்கி
விட்டால், நிச்சயமாக
அவன் நிராசைப்பட்டு
பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
[11:10]
அவனுக்கு
ஏற்பட்ட துன்பத்திற்குப்
பின், நாம் அருட்கொடைகளை
அவன் அனுபவிக்கும்படிச்
செய்தால், "என்னை
விட்டுக் கேடுகள்
எல்லாம் போய்விட்டன" என்று
நிச்சயமாகக் கூறுவான்.
நிச்சயமாக அவன்
பெருமகிழ்ச்சியும்
பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
[11:11]
ஆனால்
(துன்பங்களைப்) பொறுமையுடன்
சகித்து எவர் நற்கருமங்கள்
செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான
நற்கூலியும் உண்டு.
[11:12]
(நபியே!
நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே
எனச் சடைந்து)
வஹீ மூலம் உமக்கு
அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை
விட்டுவிட எண்ணவோ, "அவர் மீது
ஒரு பொக்கிஷம்
இறக்கப்பட வேண்டாமா? அல்லது
அவருடன் ஒரு மலக்கு
வர வேண்டாமா?" என்று
அவர்கள் கூறுவதினால்
உம் இதயம் (சஞ்சலத்தால்)
இடுங்கியிருக்கவோ
கூடும். நிச்சயமாக
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி
வேறில்லை; அல்லாஹ்
எல்லா பொருட்களின்
மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.