[11:13]
அல்லது "இ(வ் வேதத்)தை அவர்
பொய்யாகக் கற்பனை
செய்து கொண்டார்" என்று
அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்)
நீங்களும் இதைப்
போன்ற கற்பனை செய்யப்பட்ட
பத்து அத்தியாயங்களை
கொண்டு வாருங்கள்
- நீங்கள் உண்மையாளர்களாக
இருந்தால்! அல்லாஹ்வைத்
தவிர்த்து உங்களுக்கு
சாத்தியமான எல்லோரையுமே
(இதற்குத் துணை
செய்ய) அழைத்துக்
கொள்ளுங்கள்" என்று
(நபியே!) நீர் கூறுவீராக.
[11:14]
அவர்கள்
உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்; "அறிந்து
கொள்ளுங்கள், நிச்சயமாக
இது அல்லாஹ்வின்
ஞானத்தைக் கொண்டே
அருளப்பட்டது; இன்னும்
வணக்கத்திற்குரியவன்
அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள்
அல்லாஹ்வுக்கு
முற்றிலும் வழிபடுவீர்களா?" (என்று கூறவும்.)
[11:15]
எவரேனும்
இவ்வுலக வாழ்க்கையையும், அதன்
அலங்காரத்தையும்
(மட்டுமே) நாடினால்
அவர்களுடைய செயல்களுக்குரிய
(பலன்களை) இவ்வுலகத்திலேயே
நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு
செய்யப்பட மாட்டார்கள்.
[11:16]
இத்தகையோருக்கு
மறுமையில் நரக நெருப்பைத்
தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்)
இவர்கள் செய்த
யாவும் அழிந்துவிட்டன்
அவர்கள் செய்து
கொண்டிருப்பவையும்
வீணானவையே!
[11:17]
எவர்
தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின்
மீது இருக்கிறாரோ
மேலும் இறைவனிடமிருந்து
ஒரு சாட்சியாளர் எவரிடம்
(பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ
மேலும் இதற்கு
முன்னால் மூஸாவுடைய
வேதம் வழிகாட்டியாகவும்
ரஹ்மத்தாகவும்
இருக்கிறதோ அவர்கள்
தான் இதனை நம்புவார்கள்; ஆனால்
(இக்) கூட்டதார்களில்
எவர் இதை நிராகரிக்கிறாரோ
அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள
இடம் நரக நெருப்பேயாகும்.
ஆதலால் (நபியே!)
இதைப் பற்றி நீர்
சந்தேகத்தித்திலிருக்க
வேண்டாம் - இ(வ்வேதமான)து
நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து
வந்த உண்மையாகும்
- எனினும் மனிதர்களில்
பெரும்பாலோர்
நம்பிக்கை கொள்வதில்லை.
[11:18]
அல்லாஹ்வின்
மீது பொய்யான கற்பனையைச்
சொல்பவனைவிடப்
பெரும் அநியாயக்காரன்
யார்? அத்தகையோர்
(மறுமையில்) தங்கள்
இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம்
தங்கள் இறைவன்
மீது பொய்
கூறியவர்கள்" என்று
சாட்சி கூறுவோர்
சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள்
மீது அல்லாஹ்வின்
சாபம் உண்டாகட்டும்.
[11:19]
அவர்கள்
(மனிதர்களை) அல்லாஹ்வின்
பாதையை விட்டுத்
தடுக்கின்றார்கள்; மேலும்
அதில் கோணலையும் உண்டுபண்ண
விரும்புகிறார்கள்
- இவர்கள் தாம்
மறுமையை நிராகரிப்பவர்கள்
ஆவார்கள்.