[11:82]
எனவே
(தண்டனை பற்றிய)
நம் கட்டளை
வந்துவிட்டபோது, நாம்
(அவ்வூரின்) அதன்
மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும்
அதன்மீது சடப்பட்ட
செங்கற்களை மழைபோல்
பொழியவைத்தோம்.
[11:83]
அக்கற்கள்
உம் இறைவனிடமிருந்து அடையாளம்
இடப்பட்டிருந்தன்
(அவ்வூர்) இந்த
அநியாயக்காரர்களுக்கு
வெகு தொலைவிலும் இல்லை.
[11:84]
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய
சகோதரராகிய ஷுஐபை
(நம் தூதராக) அனுப்பிவைத்தோம்.
அவர் (அவர்களிடம்; "என்) சமூகத்தவர்களே!
அல்லாஹ் (ஒருவனையே)
நிங்கள் வணங்குங்கள்.
அவனைத்தவிர உங்களுக்கு
வேறு நாயனில்லை; அளவையிலும்
நிறுவையிலும்
நீங்கள் குறைவு
செய்யாதீர்கள்; நீங்கள்
நல்ல நிலையையிலிருப்பதை
(இப்பொழுது) நான்
காண்கின்றேன்; ஆனால்
(அளவிலும், நிறுவையிலும்
நீங்கள் மோசம்
செய்தால்) நிச்சயமாக
உங்களைச் சூழ்ந்து
கொள்ளக்கூடிய வேதனை
ஒரு நாள் உங்களை
வந்தடையும் என்று
நான் பயப்படுகிறேன்.
[11:85]
(என்) சமூகத்தவர்களே!
அளவையிலும் நிறுவையிலும், நீதியைக்
கொண்டு நீங்கள்
பூர்த்தி செய்யுங்கள்.
(மக்களுக்குக்
கொடுக்க வேண்டிய)
அவர்களுடைய பொருட்களைக்
குறைத்து விடாதீர்கள்.
பூமியில் விஷமம்
செய்துகொண்டு
(வரம்பு மீறி) அலையாதீர்கள்.
[11:86]
நீங்கள்
உண்மை முஃமின்களாக
இருந்தால், அல்லாஹ்
மீதப்படுத்துவதே
உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான்
உங்களைக் கண்காணிப்பவனும்
அல்லன்" என்று கூறினார்.
[11:87]
(அதற்கு)
அவர்கள் "ஷுஐபெ! நாங்கள்
எங்கள் மூதாதையர்
வணங்கிய தெய்வங்களை
விட்டு விடுமாறும், நாங்கள்
எங்கள் பொருட்களை
எங்கள் விருப்பப்படிச்
செலவு செய்வதை
விட்டுவிடுமாறும்
உம்முடைய (மார்க்கத்)
தொழுகையா உம்மை
ஏவுகிறது? நிச்சயமாக
நீர் கிருபையுள்ளவரும்
நேர்மையானவரும் தான்" என்று
(ஏளனாமாக)
கூறினார்கள்.
[11:88]
(அதற்கு)
அவர் கூறினார்; "(என்னுடைய)
சமூகத்தவர்களே! நான்
என்னுடைய இறைவனின்
தெளிவான அத்தாட்சி
மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து
எனக்கு அழகான ஆகார
வசதிகளை அளித்து இருப்பதையும்
நீங்கள் அறிவீர்களா? (ஆகவேகர்க
யார்,) நான் எதை விட்டு
உங்களை விலக்குகின்றேனோ,
(அதையே
நானும் செய்து
உங்கள் நலனுக்கு)
மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால்
இயன்ற வரையில்
(உங்களின்) சீர்
திருத்தத்தையேயன்றி வேறெதையும்
நான் நாடவில்லை; மேலும், நான் உதவி
பெறுவது அல்லாஹ்வைக்
கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே
பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும்
அவன் பாலே மீளுகிறேன்.