[11:98]
அவன்
(-ஃபிர்அவ்ன்) மறுமை றானில்
தன் சமூகத்தாருக்கு
முன் சென்று அவர்களை
நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்)
கொண்டு போய்ச்
சேர்க்குமிடம்
மிகவும் கெட்டது.
[11:99]
இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும்
அவர்கள் சாபத்தால்
பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு
கிடைக்கும் (இந்த) சன்மானம்
மிகவும் கெட்டது.
[11:100]
(நபியே!
மேற்கூறப்பட்ட)
இவை (சிற்)
சில ஊhகளில் வரலாறுகள்
ஆகும்; இவற்றை நாம்
உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில்
சில (இப்போதும்)
உள்ளன் சில (அறுவடை
செய்யப்பட்டவை
போல்) அழிபட்டும் போயின.
[11:101]
அவர்களுக்கு
நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும்
அவர்கள் தமக்குத்தாமே
அநியாயம் செய்து
கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து
கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி
அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த
அவர்களின் தெய்வங்கள்
எதுவும் அவர்களுக்கு
எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும்
அவை அவர்களுக்கு
நஷ்டத்தை தவிர
(வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
[11:102]
அநியாயம்
செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்)
பிடிப்பானேயானால், இப்படித்தான்
உம் இறைவனுடைய
பிடி இருக்கும்
- நிச்சயமாக
அவனுடைய பிடி வேதனை
மிக்கதாகவம் மிகக்
கடினாமானதாகவும்
இருக்கும்.
[11:103]
நிச்சயமாக
மறுமை நாளின் வேதனையைப்
பயப்படுகிறவர்களுக்கு
இதில் (தக்க) அத்தாட்சி
இருக்கிறது; அது மனிதர்கள்
யாவரும் ஒன்று
சேர்க்கப்படும்
நாளாகும் - அன்றியும்
அவர்கள் யாவரும் (இறைவன்
முன்னிலையில்)
கொண்டுவரப்படும்
நாளாகும்.
[11:104]
குறிப்பிட்ட
தவணைக்காகவே தவிர அதனை
நாம் பிற்படுத்தவில்லை.
[11:105]
அந்நாள்
வரும்போது அவனுடைய அனுமதியின்றி
எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களிர்
தூபாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கி
சாலிகளும் இருப்பர்.
[11:106]
தூபாப்பிய
சாலிகள் (நரக) நெருப்பில்
(எறியப்பட்டு)
இருப்பார்கள்.
அதில் அவர்களுக்கு
பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்)
இருக்கும்.
[11:107]
உம்
இறைவன் நாடினாலன்றி, வானங்களும்
பூமியும் நீடிக்கும்
காலமெல்லாம் அவர்கள்
அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று
விடுவார்கள்; நிச்சயமாக
உம் இறைவன் தான்
நாடியதைச் செய்து முடிப்பவன்.
[11:108]
நற்பாக்கிய
சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன்
நாடினாலன்றி, வானங்களும்
பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம்
அவர்கள் அ(ச்சவனத்)திலேயே
நிலைபெற்று விடுவார்கள்
- இது முடிவுறாத அருட்
கொடையாகும்.