[11:118]
உம்
இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள்
அனைவரையும் ஒரே
சமுதாயத்தவராக
ஆக்கியிருப்பான்; (அவன்
அப்படி ஆக்கவில்லை.)
எனவே, அவர்கள் எப்போதும்
பேதப்பட்டுக்
கொண்டே இருப்பார்கள்.
[11:119]
(அவர்களில்)
உம்முடைய இறைவன் அருள்
புரிந்தவர்களைத்
தவிர் இதற்காகவே
அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக
நான் ஜின்கள், மனிதர்கள்
ஆகிய யாவரைக்கொண்டும்
நரகத்தை நிரப்புவேன்" என்ற உம்
இறைவனுடைய வாக்கும்
பூர்த்தியாகிவிடும்.
[11:120]
(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து
(இவை) யாவற்றையும்
உம் இதயத்தைத்
திடப்படுத்துவதற்காக உமக்குக்
கூறினோம். இவற்றில்
உமக்குச் சத்தியமும்
நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும்
வந்து இருக்கின்றன.
[11:121]
நம்பிக்கை
கொள்ளாதவர்களிடம் (நபியே!)
நீர் கூறுவீராக் "நீங்கள்
உங்கள் போக்கில்
நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக
நாங்களும் (எங்கள்
போக்கில்) செயல்படுகிறோம்."
[11:122]
நீங்களும்
(உங்கள் போக்கின் முடிவை)
எதிர் பார்த்துக்
கொண்டிருங்கள்; நாங்களும்
(அவ்வாறே) எதிர்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
[11:123]
வானங்களிலும், பூமியிலும்
உள்ள மறைபொருள்கள்
(இரகசியங்கள் பற்றிய
ஞானம்) அல்லாஹ்வுக்கே
உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும்
(முடிவு காண) மீளும்.
ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன்
மீதே (பாரஞ்சாட்டி)
உறுதியான நம்பிக்கை
வையுங்கள் - நீங்கள்
செய்பவை குறித்து
உம் இறைவன்
பராமுகமாக இல்லை.
Yûsuf
அனைத்துப்புகழும்,அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும்.
[12:1]
அலிஃப், லாம், றா. இவை
தெளிவான இவ்வேதத்தின்
வசனங்களாகும்.
[12:2]
நீங்கள்
விளக்கிக் கொள்வதற்காக, இதனை
அரபி மொழியிலான
குர்ஆன் நிச்சயமாக
நாமே இறக்கி வைத்தோம்.
[12:3]
(நபியே!) நாம்
வஹீ மூலம் உம் மீது இந்த
குர்ஆனை அருள்
செய்தது கொண்டு
மிக அழகான வரலாற்றை
உமக்கு நாம் கூறுகின்றோம்
- இதற்குமுன் (இது
குறித்து) ஏதம்
அறியாதவர்களில்
(ஒருவராய்)
நீர் இருந்தீர்.
[12:4]
யூஸுஃப்
தம் தந்தையாரிடம்; "என் அருமைத்
தந்தையே! பதினோரு
நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும்
- (இவை யாவும்)
எனக்குச் சிரம்
பணிவதை மெய்யாகவே
(கனவில்) நான் கண்டேன்" என்று
கூறியபொழுது.