[12:15]
(இவ்வாறாக)
அவர்கள் அவரை அழைத்துச்
சென்று ஆழமான கிணற்றில்
தள்ளிவிட ஒன்று
சேர்த்து முடிவு
செய்த போது, "நீர் அவர்களின்
இச்செயலைப்ற்றி
அவர்களுக்கு (ஒரு
காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம்
அவர்கள் உம்மை
அறிந்து கொள்ள
மாட்டார்கள்" என்று
நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
[12:16]
இன்னும், அவர்கள்
(அன்று) பொழுது
சாய்ந்ததும் தங்களுடைய
தந்தையாரிடம்
அழுது கொண்டே வந்தார்கள்.
[12:17]
எங்கள்
தந்தையே! நாங்கள் யூஸுஃபை
எங்களுடைய சாமான்களிடத்தில்
விட்டுவிட்டு, ஓடி(யாடி
விளையாடிக் கொண்டே வெகுதூரம்)
சென்று விட்டோம்; அப்போது
ஓநாய் அவரை(ப்
பிடித்துத்) தின்று
விட்டது - ஆனால்
நாங்கள் உண்மையே
சொன்ன போதிலும், நீங்கள்
எங்களை நம்பவே
மாட்டீர்கள்! என்று கூறினார்கள்.
[12:18]
(மேலும், தங்கள்
கூற்றை மெய்ப்பிக்க)
யூஸுஃபுடைய சட்டையில்
பொய்யான இரத்தத்தைத்
தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; "இல்லை, உங்கள்
மனம் ஒரு (தீய) காரியத்தை
உங்களுக்கு அழகாகக்
காண்பித்துவிட்டது
எனவே (எனக்கு இந்நிலையில்
அழகிய) பொறுமையை மேற்கொள்வதே
நலமாக இருக்கும்; மேலும், நீங்கள்
கூறும் விஷயத்தில்
அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்" என்று
கூறினார்.
[12:19]
பின்னர்
(அக்கிணற்றருகே)
ஒரு பயணக்கூட்டம்
வந்தது அவர்களில்
தண்ணீர் கொண்டு
வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்)
அனுப்பினார்கள்.
அவர் தம் வாளியை(க்
கிணற்றில்) விட்டார். "நற்செய்தி! இதோ ஓர்
(அழகிய) சிறுவன்!" என்று
கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து)
அவரை ஒரு வியாபரப்
பொருளாக(க் கருதி)
மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள்
செய்ததை எல்லாம்
அல்லாஹ் நன்கறிந்தவனாகவே
இருக்கின்றான்.
[12:20]
(இதற்குள்
அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து)
அவரை அவர்கள் (விரல்விட்டு)
எண்ணக்கூடிய சில
வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான
கிரயத்திற்கு
விற்றுவிட்டார்கள். அவர்
விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக
இருந்தார்கள்.
[12:21]
(யூஸுஃபை)
மிஸ்ரு நாட்டில் வாங்கியவர்
தம் மனைவியை நோக்கி, "இவர்
(நம்மிடம்) தங்குவதை
சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை
இவர் நமக்கு (மிக்க)
நன்மையைக் கொண்டு
வரலாம்; அல்லது இவரை நாம்
(நம் சவீகார) புத்திரனாக
ஆக்கிக் கொள்ளலாம்" என்று
கூறினார். இவ்வாறு
நாம் யூஸுஃபுக்குப்
பூமியிலே (தக்க)
வசதியளித்தோம்; இன்னும்
நாம் அவருக்குக்
கனவுகளுக்குப்
பலன் கூறுவதையும்
கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ்
தன் காரியத்தில்
வெற்றியாளனாக
இருக்கிறான் -
ஆனால் மக்களில்
பெரும்பாலோர்
(இதனை) அறிந்து
கொள்ள மாட்டார்கள்.
[12:22]
அவர்
தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு
நாம் ஞானத்தையும், கல்வியையும்
கொடுத்தோம். இவ்வாறே
நன்மை செய்வோருக்கு
நாம் நற்கூலி வழங்குகிறோம்.