[12:44]
(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள்
(இக்) கனவுகளுக்கு
விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்
என்று கூறினார்கள்.
[12:45]
அவ்விருவரில்
(சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட
காலத்திற்குப்
பின்னர், (யூஸுஃபை)
நினைவு கூர்ந்து "இக்கனவின்
விளக்கத்தை நான்
உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்)
அனுப்பி வையுங்கள்" என்று
சொன்னார்.
[12:46]
(சிறையில்
யூஸுஃபை கண்ட)
அவர், "யூஸுஃபே! உண்மையாளரே!
ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த
பசக்கள் தின்பதையும்; பசுமையான
ஏழு கதிர்களையும்
வேறு (ஏழு) காய்ந்து
(சாவியாகிவிட்ட) கதிர்களையும்
(கனவில் கண்டால்
அக்கனவுக்குப்
பலன் என்ன என்பதை)
எனக்கு அறிவிப்பீராக
மக்கள் அறிந்து
கொள்வதற்காக அவர்களிடம்
திரும்பிப் போய்(ச்
சொல்ல) வேண்டியிருக்கிறது" (என்று
கூறினார்).
[12:47]
நீங்கள்
தொடர்ந்து ஏழு
ஆண்டுகளுக்கு
(நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு
நீங்கள் அறுவடை
செய்த - (விளைச்ச)லில், நீங்கள்
உண்பதற்கு வேண்டிய
ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை
அதற்குரிய கதிர்களிலேயே
விட்டு வையுங்கள்.
[12:48]
பின்னும், அதற்கப்பால்
கடினமான (பஞ்சத்தையுடை
வருடங்கள்) ஏழு
வரும்; நீங்கள் பஞ்சமான
ஆண்டுகளுக்காக
பத்திரப்படுத்தி
முன்னமேயே வைத்திருப்பதில்
சொற்ப (அளவை)த் தவிர
மற்றதை அவை (அந்த
பஞ்ச ஆண்டுகள்)
தின்றுவிடும்.
[12:49]
பின்னும், அதற்கப்பால்
ஓராண்டு வரும், அதில்
மக்களுக்கு நல்ல
மழை பெய்யும்; அதில்
(விளையும் கனிகளிலிருந்து) அவர்கள்
பழரசங்கள் பிழிந்து
(சகமாக) இருப்பார்கள்" என்று
கூறினார்.
[12:50]
("இவ்விவரம்
அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்)
அவரை என்னிடம்
அழைத்து வாருங்கள்" என்று
அரசர் கூறினார்; (அவருடைய)
தூதர் யூஸுஃபிடம்
வந்தபோது அவர், "நீர் உம்
எஜமானரிடம் திரும்பிச்
சென்று, 'தம் கைகளை
வெட்டிக்கொண்ட
பெண்களின் உண்மை
நிலை என்ன?' என்று அவரிடம்
கேளும். நிச்சயமாக
என் இறைவன் அப்பெண்களின்
சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றனான்" என்று
கூறினார்.
[12:51]
(இவ்விவரம்
அறிந்த அரசர் அப் பெண்களை
அழைத்து) "நீங்கள்
யூஸீஃபை உங்கள்
விருப்பத்திற்கு
இணங்குமாறு அழைத்தபோது
உங்களுக்கு நேர்ந்தது
என்ன?" என்று கேட்டார்;
(அதற்கு)
அப் பெண்கள்,
"அல்லாஹ்
எங்களை காப்பானாக! நாங்கள்
அவரிடத்தில் யாதொரு கெடுதியையும்
அறியவில்லை" என்று
கூறினார்கள்; அஜீஸுடைய
மனைவி, "இப்பொழுது
(எல்லோருக்கும்)
உண்மை வெளிப்பட்டு
விட்டது. நான்
தான் இவரை என் விருப்பத்திற்கு
இணங்குமாறு வற்புறுத்தினேன்.
நிச்சமயாக அவர்
உண்மையாளர்களில் உள்ளவர்" என்று
கூறினாள்.
[12:52]
இ(வ்
விசாரணையை நான் விரும்பிய)தன்
காரணம்; "நிச்சயமாக
அவர் (என் எஜமானர்)
இல்லாத போது அவருக்கு நான்
துரொகம் செய்யவில்லை
என்பதை அவர் அறிந்து
கொள்வதுடன், நிச்சயமாக
அல்லாஹ் துரொகிகளின்
சதியை நடைபெற விடுவதில்லை
என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.