[12:87]
என்
மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு)
நீங்கள் செல்லுங்கள்!
யூஸுஃபையும் அவருடைய
சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத்
தேற்றும்) அல்லாஹ்வின்
அருளைப் பற்றி
நம்பிக்கை இழக்காதீர்கள்.
ஏனென்றால் நிச்சயமாக
காஃபிர்களின்
கூட்டத்தைத் தவிர
(வேறுயாரும்) அல்லாஹ்வின்
அருளைப்பற்றி
நம்பிக்கை இழக்கமாட்டார்கள்
என்றும் கூறினார்.
[12:88]
அவ்வாறே
அவர்கள் (மிஸ்ரையடைந்து)
யூஸுஃப் முன்னிலையில்
வந்து அவரிடம்; "அஜீஸே!
எங்களையும் எங்கள்
குடும்பத்திலுள்ளவர்களையும்
பெருந்துயர் பற்றிக்கொண்டது
நாங்கள் சொற்பமான பொருளையே
கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு
நிரப்பமாகத் (தானியம்)
அளந்து கொடுங்கள்; எங்களுக்கு
(மேற்கொண்டு) தானமாகவும்
கொடுங்கள். நிச்சயமாக
அல்லாஹ் தானம்
செய்பவர்களுக்கு
நற்கூலி வழங்குகிறேன்" என்று
கூறினார்கள்.
[12:89]
(அதற்கு
அவர்?) "நீங்கள் அறிவீனர்களாக
இருந்த போது,
யூஸுஃபுக்கும்
அவர் சகோதரருக்கும்
நீங்கள் என்ன செய்தீர்கள்
என்பதை நீங்கள்
அறிவீர்களா?"
என்று
வினவினார்.
[12:90]
(அப்போது
அவர்கள்) "நிச்சயமாக
நீர் தாம் யூஸுஃபோ?
என்று
கேட்டார்கள்; (ஆம்!) நான்
தாம் யூஸுஃபு
(இதோ!) இவர் என்னுடைய
சகோதரராவர்; நிச்சயமாக
அல்லாஹ் எங்கள்
மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர்
(அவனிடம் பயபக்தியுடன்
இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும்
மேற்கொண்டிருக்கிறாரோ
(அத்ததைய) நன்மை
செய்வோர் கூலியை
நிச்சயமாக அல்லாஹ்
வீணாக்கிவிடமாட்டான்" என்று
கூறினார்.
[12:91]
அதற்வர்கள் "அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நாங்கள்
உமக்குத் தவறு
இழைத்தவர்களாக
இருந்தும், நிச்சயமாக
அல்லாஹ் எங்களை
விட உம்மை மேன்மையுடையவராகத்
தெரிவு செய்திருக்கின்றான்" என்று கூறினார்கள்.
[12:92]
அதற்வர், "இன்று
உங்கள் மீது
எவ்விதக் குற்றச்சாட்டும்
இல்லை அல்லாஹ்
உங்களை மன்னித்தருள்வானாக!
அவனே கிருபையாளர்களிலெல்லாம்
மிக்க கிருபையாளனாக
இருக்கின்றான்" என்று
கூறினார்.
[12:93]
என்னுடைய
இந்தச் சட்டையை நீங்கள்
எடுத்துக் கொண்டு
சென்று, என் தந்தையாரின்
முகத்தில் போடுங்கள்; அவருக்குக்
கண்பார்வை வந்துவிடும்; இன்னும்
உங்களுடைய குடும்பத்தார்
அனைவரையும் என்னிடம்
கொண்டு வாருங்கள்
(என்று கூறினார்).
[12:94]
(அவர்களுடைய)
ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை
விட்டுப்) பிரிந்த
நேரத்தில், அவர்களுடைய
தந்தை, "நிச்சயமாக
நான் யூஸுஃபின்
வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக)
என்னை நீங்கள்
பைத்தியக்காரன் என்று
எண்ணாமல் இருக்க
வேண்டுமே!" என்றார்.
[12:95]
(அதற்கவர்கள்) "அல்லாஹ்வின்
மீது சத்தியமாக! நீங்கள்
உங்களுடைய பழைய
தவறினாலேயே இருக்கின்றீர்கள்" என்று
சொன்னார்கள்.