[13:6]
(நபியே!) நன்மை
(வருவதற்கு) முன்னர், தீமையைக்
கொண்டு (வருமாறு)
உம்மை இவர்கள்
அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக
இவர்களுக்கு முன்னரும்
(வேதனை மிக்க தண்டனைகள்
வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள்
நடந்தேயிருக்கின்றன்
நிச்சயமாக உம்
இறைவன் மனிதர்களை
அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும்
இருக்கின்றான்; மேலும், உம் இறைவன்
நிச்சயமாக வேதனை செய்வதிலும்
கடுமையானவனாக
இருக்கின்றான்.
[13:7]
இன்னும்
(நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு
அவருடைய இறைவனிடமிருந்து
(நாம் விரும்பும்) அத்தாட்சி
இறக்கப்பட வேண்டாமா?" என்று
கூறுகிறார்கள்; நீர்
அச்சமூட்டி எச்சரிப்பவரே
ஆவீர், மேலும், ஒவ்வொரு
சமூகத்தவருக்கும்
ஒரு நேர்வழி காட்டியுண்டு.
[13:8]
ஒவ்வொரு
பெண்ணும் (கர்ப்பத்தில்)
சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள்
சரங்கி குறைவதையும், அவை விரிந்து
அதிகரிப்பதையும்
அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு
பொருளுக்கும்
அவனிடம் அளவு
இருக்கின்றது,
[13:9]
(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும்
அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும்
பெரியவன்; மிகவும்
உயர்ந்தவன்.
[13:10]
எனவே, உங்களில்
எவரும் தம் பேச்சை
இரகசியமாக வைத்துக்
கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக்
கூறினாலும், (அவனுக்கு)
சமமேயாகும்; இரவில்
மறைந்திருப்பவனும், பகலில்
பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும்
அவனுக்குச் சமமே).
[13:11]
மனிதனுக்கு
முன்னாலும், பின்னாலும்
தொடர்ந்து வரக்கூடிய
(மலக்குகள்) இருக்கிறார்கள்.
அல்லஹ்வின் கட்டளையால்
அவர்கள் அவனைப்
பாதுகாக்கிறார்கள்; எந்த
ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத்
தாமே மாற்றிக்
கொள்ளாத வரையில், அல்லாஹ்
அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை
இன்னும் அல்லாஹ்
ஒரு சமுதாயத்தாருக்குத்
தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர்
எவருமில்லை - அவர்களுக்கு
அவனைத்தவிர துணை
செய்வோர் எவரும் இல்லை.
[13:12]
அவன்
எத்தகையவெனின், அச்சத்தையும்
(அதே நேரத்தில்
மழைக்குரிய) ஆதரவையும்
தரக்கூடிய நிலையில்
மின்னலை அவன்தான்
உங்களுக்குக்
காட்டுகிறான்; கனத்த
மேகத்தையும் அவனே
உண்டாக்குகிறான்.
[13:13]
மேலும்
இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள்
அவனையஞ்சியும்
(அவனை) தஸபீஹு செய்(து
துதிக்)கின்றனர். இன்னும்
அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக்
கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்)
அவர்கள் அல்லாஹ்வைப்
பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ
மிகுந்த வல்லமையுடையவனாக
இருக்கின்றான்.