[13:19]
உம்
இறைவனால் உம் மீது நிச்சயமாக
இறக்கப்பட்ட (வேதத்)தை
உண்மையன அறிகிறவர்
குரடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக
(இவ்வேதத்தின்
மூலம்) அறிவுடையவர்கள்
தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
[13:20]
அவர்கள்
எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம்
செய்த வாக்குறுதியை
முழமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும்
(தாம் செய்த)
உடன்படிக்கையை
முறித்து விடவும்
மாட்டார்கள்.
[13:21]
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால்
அல்லாஹ் எது சேர்த்துவைக்கப்
படவேண்டும் எனக்
கட்டளையிட்டானோ, அதைச்
சேர்த்து வைப்பார்கள்; இன்னும்
அவர்கள் தம் இறைவனுக்கு
அஞ்சவார்கள்; மேலும்
(மறுமை நாளின்)
கடுமையான கேள்வி
கணக்கைக் குறித்தும்
பயப்படுவார்கள்.
[13:22]
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால்
தங்கள் இறைவனின்
பொருத்தத்தைத்
தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும்
நிலைநிறுத்துவார்கள்; நாம்
அவர்களுக்கு அளித்ததிலிருந்து
இரகசியமாகவும், பகிரங்கமாகவும்
(நன்முறையில்)
செலவு செய்வார்கள்; நன்மையைக்
கொண்டே தீமையைத்
தடுத்துக் கொள்வார்கள்.
இத்தகையோருக்கே மறுமையில்
(சவனபதி யென்னும்)
நல்ல வீடு இருக்கிறது.
[13:23]
நிலையான
(அந்த) சவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய
தந்தையரில், இவர்களுடைய
மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில்
(சன்மார்க்கத்திற்கு)
இசைந்து யார் நடந்தார்களோ
அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள்
ஒவ்வொரு வாயில்
வழியாகவும் இவர்களிடம்
வருவார்கள்.
[13:24]
நீங்கள்
பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக
'ஸலாமுன்
அலைக்கும்' (உங்கள்
மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய
இறுதி வீடு மிகவும்
நல்லதாயிற்று!
(என்று கூறுவார்கள்.)
[13:25]
எவர்கள்
அல்லாஹ்விடம்
அளித்த வாக்குறுதியை
உறுதிப்படுத்திய
பின்னர் முறித்து
விடுகிறார்களோ
இன்னும், அல்லாஹ் சேர்த்து
வைக்க வேண்டுமென
ஏவியதைப் பிரித்து
விடுகிறார்களோ
பூமியில் ஃபஸாது (விஷமம்)
செய்கிறார்களோ
- அத்தகையோருக்குச்
சாபந்தான் அவர்களுக்கு
மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
[13:26]
அல்லாஹ்
தான் நாடியவருக்கு சம்பத்தை
விசாலமாக்குகிறான்; (தான்
நாடியவருக்கு)
அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும்
அவர்கள் இவ்வுலக
வாழ்க்கையில்
மகிழ்ச்சியடைகிறார்கள்
- இவ்வுலக வாழ்க்கையோ
மறுமைக்கு ஒப்பிடாமல்
மிகவும் அற்பமேயன்றி
வேறில்லை.
[13:27]
இவருக்கு
இவருடைய இறைவனிடமிருந்து
ஓர் அத்தாட்சி
இறக்கி வைக்கப்படக்
கூடாதா என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!)
நீர் கூறும்; "நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால்
எவர் திரும்புகிறாரோ
அத்தகையோருக்கு
நேர் வழிகாட்டுகிறான்" என்று
[13:28]
(நேர் வழி
பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள்
தாம் (முற்றிலும்)
ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை
நினைவு கூர்வதால்
அவர்களுடைய இதயங்கள்
அமைதி பெறுகின்றன்
அல்லாஹ்வை நினைவு
கூர்வது கொண்டு
தான் இதயங்கள்
அமைதி பெறுகின்றன
என்பதை அறிந்து
கொள்க!