[13:35]
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட
சவனபதியின் தன்மையானது
- அதன் கீழே நீர்
அருவிகள் (என்றென்றும்)
ஓடிக் கெண்டிருக்கும்; அதன்
ஆகாரமும், அதன்
நிழலும் நிலையானவை
இது தான்
பயபக்தியுடையோரின்
முடிவாகும்; காஃபிர்களின்
முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
[13:36]
எவர்களுக்கு
நாம் (முன்னர்) வேதத்தை
அளித்தோமோ, அவர்கள்
(நபியே!) உம் மீது
இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப்
பற்றி மகிழ்வார்கள்; எனினும்
இதன் சில பகுதிகளை
மறுக்கிறவர்களும்
(அவர்களுடைய) கூட்டதில்
ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ்
- (ஒருவனையே) வணங்க
வேண்டும்; அவனுக்கு
(எதனையும், எவரையும்)
இணைவைக்கக் கூடாது
என்பது தான்; நான்
(உங்களை) அவன்
பக்கமே அழைக்கின்றேன்; அவன்
பாலே (என்) மீட்சியும்
இருக்கிறது" என்று (நபியே!)
நீர் கூறுவீராக.
[13:37]
(நபியே!) இவ்வாறே
அரபி (மொழி)யில்
சட்ட திட்டங்களைக்
கொண்டதாக, இ(வ் வேதத்)தை
நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு
ஞானம் வந்த பின்னரும்
அவர்களுடைய (வீணான) இச்சைகளை
நீர் பின்பற்றினால்
அல்லாஹ்விடமிருந்து
(உம்மை இரட்சிக்கும்
உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ
(எவரும்) உமக்குக்
கிடைக்க மாட்டார்.
[13:38]
(நபியே!) நிச்சயமாக
உமக்கு முன்னரும், நாம் தூதர்களை
அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும்
மனைவியரையும், சந்ததிகளையும்
நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத்
தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல்
எந்த அத்தாட்சியையும்
கொண்டுவந்ததில்லை
ஒவ்வொரு தவணைக்கும்
ஒரு (பதிவு)
ஏடு உள்ளது.
[13:39]
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து)
அல்லாஹ் அழித்து
விடுவான். (தான்
நாடியதை அதில்) நிலைத்திருக்கவும்
செய்வான் - அவனிடத்திலேயே
உம்முல் கிதாப்
(மூலப் பதிவேடும்) இருக்கறது.
[13:40]
(நபியே!) அவர்களுக்கு
நாம் வாக்களித்தவற்றில்
சிலதை (உம் வாழ்
நாளிலேயே உம் கண்ணால்)
நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது
(அதற்கு முன்னரே)
நாம் உம்மைக் கைப்பற்றிக்
கொண்டாலும் (அதைப்
பற்றி நீர் விசாரப்பட
வேண்டாம்); உம்முடைய
கடமையெல்லாம்
(நம்முடைய கட்டளையை
அவர்களிடம்) சேர்ப்பிப்பது
தான்; (அவர்களிடம்)
கணக்கு வாங்குதல் நம்மிடம்
இருக்கிறது.
[13:41]
பூமியை
அதன் அருகுகளிலிருந்து நாம்
(படிப்படியாகக்)
குறைத்து வருகிறோம்
என்பதை அவர்கள்
பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே
தீர்ப்பளிப்பவன்; அவன்
தீர்ப்பை மாற்றுபவன்
எவனுமில்லை! மேலும், அவன்
கேள்வி கணக்கு
கேட்பதில் மிகவும்
தீவிரமானவன்.
[13:42]
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும்
(இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச்
செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா
சூழ்ச்சிக(ளின்
முடிவுக)ளும் அல்லாஹ்விடமே
இருக்கின்றன்
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும்
அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்)
எவர்களுக்கு நல்ல
வீடு உரியது
என்பதை காஃபிர்கள்
சீக்கரத்தில்
அறிந்து கொள்வார்கள்.