[14:19]
நிச்சயமாக
அல்லாஹ் வானங்களையும், பூமியையும்
உண்மையைக் கொண்டே
படைத்திருக்கின்றான்
என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன்
நாடினால் உங்களைப்
போக்கிவிட்டு
புதியதொரு படைப்பைக் கொண்டு
வருவான்.
[14:20]
இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினானதுமல்ல.
[14:21]
அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு
மறுமை நாளில்)
அல்லாஹ்வின் சமூகத்தில்
நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்)
பலஹீனமாக இருந்தவர்கள்
(இவ்வுலகில்) பெருமை
அடித்துக் கொண்டிருந்தவர்களை
நோக்கி; "நிச்சயமாக
நாங்கள் (உலகில்)
உங்களைப் பின் தொடர்பவர்களாக
இருந்தோம்; இப்போது
நீங்கள் அல்லாஹ்
(வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து
எதையேனும் எங்களை
விட்டும் தடுக்க
முடியுமா?" என்று கேட்பார்கள்; (அதற்கு)
அவர்கள், "அல்லாஹ்
எங்களுக்கு (ஏதாவது)
வழியைக் காட்டினால்
நாங்கள் அவ்வழியை
உங்களுக்குக்
காட்டுவோம்; (தப்பிக்க
வழியே அன்றி, வேதனையை
அஞ்சி) நாம் பதறிக்
கலங்கினாலும், அல்லது
பொறுமையாக இருந்தாலும்
நமக்கு ஒன்று
தான்; வேறு புகலிடமே
நமக்கு இல்லையே!" என்று
(கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.
[14:22]
(மறுமையில்
இவர்கள் பற்றித்)தீர்ப்புக்
கூறப்பெற்றதும்
ஷைத்தான் (இவர்களை
நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ்
உங்களுக்கு உண்மையான
வாக்குறுதியையே
வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு
வாக்களித்திருந்தேன்
- ஆனால் நான் உங்களுக்குக்
கொடுத்த வாக்கில் மாறு செய்து
விட்டேன். நான்
உங்களை அழைத்தேன்; அப்போது
நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக்
கொண்டீர்கள் என்பதைத்
தவிர எனக்கு உங்கள்
மீது எந்த அதிகாரமுமில்லை
ஆகவே நீங்கள்
என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை
நான் காப்பாற்றுபவன்
இல்லை நீங்களும் என்னைக்
காப்பாற்றுகிறவர்களில்லை.
நீங்கள் முன்னால்
என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக்
கொண்டிருந்ததையும், நிச்சயமாக
நான் நிராகரித்து
விட்டேன் - நிச்சயமாக
அக்கிரமக்காரர்களுக்கு
நோவினை மிக்க வேதனை
உண்டு" என்று கூறுவான்.
[14:23]
இன்னும், எவர்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள்
செய்திருக்கிறார்களோ
அவர்கள் சுவனபதிகளில்
புகுத்தப்படுவார்கள். அவற்றின்
கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள்
இறைவனுடைய அனுமதியைக்
கொண்டு அவர்கள்
என்றென்றும் அவற்றில்
தங்கியிருப்பார்கள்
- அங்கு அவர்களுடைய
காணிக்கையாவது "ஸலாமுன்
(சாந்தியும் சமாதானமும்
உண்டாகுக!") என்பதாகும்.
[14:24]
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ்
எவ்வாறு உதாரணம்
கூறுகிறான் என்பதை
நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க
ஒரு நன்மரத்தைப்
போன்றது அதனுடைய
வேர்கள் (பூமியில்
ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள்
வானளாவியும் இருக்கும்.