[14:25]
அது
தன்னுடைய இறைவனின் அனுமதியைக்
கொண்டு ஒவ்வொரு
காலத்திலும் தன்னுடைய
கனியைக் கொடுத்துக்
கொண்டே இருக்கிறது
மக்கள் நல்லுணர்வு
பெரும் பொருட்டு
அல்லாஹ் (இத்தகைய)
உதாரணங்களைக் கூறுகிறான்.
[14:26]
(இணை வைப்போரின்)
கெட்ட வாக்கியத்திற்கு
உதாரணம் கெட்ட
மரமாகும்; பூமியின்
மேல் பாகத்திலிருந்தும்
(அதன் வேர்)
பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு
நிலைத்து நற்கும்
தன்மையுமில்லை.
[14:27]
எவர்கள்
ஈமான் கொள்கிறார்களோ அவர்களை
இவ்வுலக வாழ்விலும்
மறுமையிலும் உறுதியான
சொல்லைக் கொண்டு
அல்லாஹ் உறுதி படுத்துகின்றான்
- இன்னும், அநியாயக்
காரர்களை அல்லாஹ்
வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும்
அல்லாஹ், தான்
எதை நாடுகின்றானனோ
அதைச் செய்கின்றான்.
[14:28]
அல்லாஹ்
(அருள் கொடைகளை) நிஃமத்களை(த்
தம்) குஃப்ரைக்
கொண்டு மாற்றித்
தங்கள் கூட்டத்தாரையும்
அழிவு வீட்டில்
நுழையும்படி செய்தவர்களை
(நபியே!) நீர் பார்க்கவில்லையா?
[14:29]
(அந்த அழிவு
வீடான) நரகத்தை அவர்கள்
வந்தடைவார்கள்
- இன்னும், அது தங்கும்
இடங்களில் மிகவும்
கெட்டதாகும்.
[14:30]
மேலும், அவர்கள்
அல்லாஹ்வின் பாதையிலிருந்து
(மக்களை) வழிகெடுப்பதற்காக
(பொய்த் தெய்வங்களை)
அவனுக்கு இணையாக்குகின்றனர்.
(நபியே! அவர்களை
நோக்கி, "இவ்வுலகில்
சிறிது காலம்) சுகம்
அனுபவித்துக்
கொள்ளுங்கள்; நிச்சயமாக
நீங்கள் (இறுதியாகச்)
சேருமிடம் நரகம்தான்" என்று
நீர் கூறிவிடும்.
[14:31]
ஈமான்
கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கல்
வாங்கலும், நட்பும்
இல்லாத (இறுதி)
நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள்
தொழுகையை முறையாகக்
கடைப்பிடித்து
ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு
அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும்
பகிரங்கமாகவும்
(தான தருமங்களில்)
செலவு செய்யட்டும்" என்று
நீர் கூறுவீராக.
[14:32]
அல்லாஹ்
எத்தகையவன் என்றால் அவன்
தான் வானங்களையும், பூமியையும்
படைத்து வானத்திலிருந்து
மழையையும் பொழியச் செய்து
அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும்
உங்களுக்கு - ஆகாரமாக
வெளிப்படுத்தித் தன் கட்டளையினால்
கடலில் செல்லுமாறு
கப்பலை உங்களுக்கு
வசப்படுத்திக்
கொடுத்தும், ஆறுகளையும்
உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
[14:33]
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச்
செல்லுமாறு சூரியனையும்
சந்திரனையும்
அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும்
பகலையும் உங்களுக்கு
வசப்படுத்தித் தந்தான்.